இடுகைகள்

பிளாக்செயின் தேசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எஸ்டோனியா எனும் பிளாக்செயின் தேசம்!

படம்
இணைய எதிர்காலம் : பிளாக்செயின் ! நாம் இன்னும் ஆதாரை அப்டேட் செய்யவே முக்கி முனகிக் கொண்டிருக்க எஸ்தானியா நாடு , வரி கட்டுவது , நிலம் வாங்குவது , ஒப்பந்தம் , ஏன் வாக்களிப்பதைக் கூட இணையத்தில் செய்யலாம் என்ற சுதந்திரத்தை மக்களுக்கு தந்துவிட்டது . 2014 ஆம் ஆண்டிலேயே இணைய நிர்வாகத்தை (e-residency) எஸ்டானியா அரசு கொண்டுவந்துவிட்டது . இதன் மூலம் குடியுரிமைக்கு கூட உலகின் எந்த சந்துபொந்திலும் இருந்துகூட விண்ணப்பிக்கலாம் . தகவல்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க உதவும் பிளாக்செயின் தொழில்நுட்பமே இதற்கு காரணம் . எஸ்டானியா உலகத்தின் முதன்முதல் கிரிப்டோ கரன்சியை வெளியிட்டது . இதைப்பின்பற்றி இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாஸ்போர்ட் , பிறப்பு சான்றிதழ்களை வழங்குவதுவரை முயற்சிகளை செய்து வருகின்றன . ஈத்திரியம் கிரிப்டோகரன்சி அண்மையில் ரஷ்ய வங்கியோடு வணிக ஒப்பந்தம் மேற்கொண்டது நம்பிக்கை அளிக்கும் முயற்சி . சீனாவும் இவ்வழியில் கிரிப்டோகரன்சியை உருவாக்கிவருகிறது . " கணிதமுறையில் இயங்கும் பிளாக்செயின் சிறப்பான முறையில் தவறான நுழைவுகளை தடுக்கிறது " என்கிறார் ஐடி துறையைச