இடுகைகள்

சேஜி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிளாக் ஸ்பிரிட் ஆன்மாவை சாமுராயாக மாறி அடக்கும் ஸ்கூபி டூ! - அனிமேஷன்

படம்
  ஸ்கூபி டூ அண்ட் தி சாமுராய் ஸ்வோர்ட் (2009) ஹன்னா பார்பரா புரடக்‌ஷன்  வார்னர் பிரதர்ஸ்  ஸ்கூபி டூ டீமை அப்படியே ஜப்பானுக்கு தூக்கிச் செல்கிறார்கள். கதை அங்குதான் நடைபெறுகிறது. அங்குள்ள அருங்காட்சியகம் ஒன்றில், தொன்மையான பிளாக் ஸ்பிரிட் என்ற உருவம் பாதுகாப்பு கவசத்துடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திடீரென அந்த உருவம் அங்கிருந்து சக்திபெற்று கண்ணாடி பாதுகாப்புகளை உடைத்துக்கொண்டு தப்பி செல்கிறது.  சாமுராய் ஒருவரின் ஆன்மாவை பிரதிஷ்டை செய்த வாளைக் கொண்டுள்ள பிளாக் ஸ்பிரிட்டை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். இல்லையெனில் உலகிற்கு ஆபத்து ஏற்படும். வேறு வழியில்லை என்பதால், பேய்களின் மர்மங்களை மோட்டார் வேனில் வந்து கோமாளித்தனங்களை செய்து கண்டுபிடிக்கும் ஐந்துபேர் கொண்ட உறுப்பினர்களான ஸ்கூபி டூ டீமின் உதவியை நாடுகிறார்கள். அவர்கள் ஜப்பானுக்கு வந்து ஜப்பானிய பின்னணி இசையுடன் சாமுராய் ரோபோட்டுகளுடன் சண்டை போட்டு, புத்திசாலித்தனமாக திட்டங்களைப் போட்டு அருங்காட்சியக திருட்டுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை.  ஃபிரெட், டெப்னே, வெல்மா, சேஜி, ஸ்கூபி டூ ஆகியோர் பொதுவாக என்ன செய்வார்கள்?

ஸ்கூபி டூ தியரிகள் - நாம் அறியாத ரகசியங்கள்!

படம்
1960 ஆம் ஆண்டு வெளியான ஹன்னா பார்பரா சீரிஸைச் சேர்ந்த ஸ்கூபி டூ மிகப் பிரபலமான அனிமேஷன் தொடர். இத்தொடர் பற்றிய பல கேள்விகள் உங்கள் மனதில் இருக்கலாம். இங்கு முடிந்தவரை சில விஷயங்களுக்கு பதில் சொல்ல முயற்சித்திருக்கிறோம். ஸ்கூபி டூ என்பது ரஷ்யாவைச் சேர்ந்த லைகா என்ற நாயை மாடலாக கொண்டு உருவாக்கப்பட்டது. அப்போது ரஷ்யா, அமெரிக்காவுக்கு இடையே விண்வெளிப்போர் இருந்தது. இதற்கு ரசிகர்களின் தியரி, ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்ட ஸ்கூபி டூ, மனிதர்களின் பேச்சை புரிந்துகொள்ளக்கூடியது. மிஸ்டரி.இன்க் எனும் கம்பெனியின் நான்கு ஆட்களோடு ஒன்றாக சுற்றுவது ஸ்கூபிடூவின் வேலை. சேஜி எனும் கதாபாத்திரம் ஸ்கூபியோடு எப்போதும் கூடவே இருப்பது. இருவரும்தான் அனைத்து விஷயங்களிலும் உள்ளே நுழைந்து கண்டுபிடிப்பது. எல்லாமே குறியீடு ஸ்கூபி டூ பேய் மர்மங்களை துப்பறியச் செல்லும் அனைத்து இடங்களுமே பேய் பங்களா மாதிரியே  இருக்கும். ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? அப்போது பொருளாதார மந்தநிலை நிலவியது. அதைக் குறிக்கும் குறியீடுகளாக சுரங்கம், மனிதர்கள் இல்லாத பாழடைந்த நகரம் என குற்றம் நடைபெறும் இடங்களாக காட்டுவார்க