இடுகைகள்

மார்வெல் - ஸ்டான்லீ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காமிக்ஸ் பிதாமகன்!

படம்
காமிக்ஸ் பிதாமகன்! ராணிகாமிக்ஸ், முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்தவர்களுக்கு ஸ்பைடர்மேன், அயர்ன்மேன் படங்கள் பிடிக்காமலிருக்காது. நிஜ உலகின் அத்தனை கவலைகளையும் மறக்கவைக்கும் மாயாஜால மெய்நிகர் உலகத்தை காமிக்ஸ் இன்று அனிமேஷன், திரைப்படங்கள் வழியாக உருவாக்கிவிட்டது. அன்று ராணி காமிக்ஸின் முகமூடி வீரர் மாயாவி, இரும்புக்கை மாயாவி, லேடி மாடஸ்தி, கரும்புலி ஆகிய கேரக்டர்களை மறக்க முடியுமா?  அப்படி காமிக்ஸாக இருந்த புத்தக நிறுவனம் திரைப்பட தயாரிப்பில் முன்னோடியாக இருக்கிறது என்றால் அது டிஸ்னியின் மார்வெல்  மட்டுமே.  மார்வெல் காமிக்ஸை யுனிவர்ஸாக மாற்றிய உழைப்புக்கு சொந்தக்காரர், ஸ்டான்லீ. 1922 ஆம் ஆண்டு டிச.28 அன்று அமெரிக்காவின் மன்ஹாட்டனில் பிறந்த ஸ்டான்லீ, பத்து வயதிலேயே ஷேக்ஸ்பியர், ஆர்தர் கானன் டாயில், மார்க் ட்வைன் ஆகியோரின் நூல்களை வாசிக்கத் தொடங்கிவிட்டார். ரோமானியாவை பூர்விகமாக கொண்ட ஸ்டான்லீ, டெவிட் பள்ளியில் படித்தார்.  தீவிர இலக்கியவாதி வேட்கையில் பல்வேறு வேலைகளை பார்த்தவர், டைம்லி பப்ளிகேஷன் என்ற தனது உறவினரின் கம்பெனியில் வாரத்திற்கு 8 டாலர்கள் சம்ப