இடுகைகள்

மருத்துவம்- மீன் மாத்திரைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடல்நலத்தை மீன் மாத்திரைகள் காப்பாற்றுமா?

படம்
மீன் மாத்திரைகள் பாதிப்பு ! இதயநோய் மேம்பாட்டிற்கென சாப்பிடும் மீன் எண்ணெய்யை உள்ளடக்கிய ஒமேகா 3 சப்ளிமெண்டுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில்லை என்று வெளியான ஆய்வு 15 பில்லியன் டாலர் சந்தையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது . ஒமேகா 3 மிகுந்துள்ள ஒரு லட்சம் உணவு மாதிரிகளை சோதனைக்கு எடுத்து செய்த ஆய்வில் இதயநோயை மேம்படுத்துவதில் பெரியளவு உதவுவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது . 1970 ஆம் ஆண்டு க்ரீன்லாந்தில் மீன் உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு இதயநோய்கள் குறைவாக ஏற்படுகிறது என வல்லுநர்கள் கருதினர் . பல்வேறு நிறுவனங்கள் மீன் எண்ணெயை உள்ளடக்கிய உணவுகளை , மாத்திரைகளை தயாரித்து விற்கத்தொடங்கினர் . இத்தேவைக்காக Forage வகை மீன் ஆண்டுக்கு 27 டன்கள் வரை பிடிக்கப்படுகிறது . இது கடல் மீன் இனங்களில் சமச்சீரின்மையை ஏற்படுத்துகிறது .   சாலமன் உள்ளிட்ட மீன்களை நேரடியாக உண்பது தனியாக மாத்திரைகளை சாப்பிடுவதை விட சிறந்தது .