இடுகைகள்

பதிப்பகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராயல்டியை ஏமாற்றும் பதிப்பு நிறுவனங்களை நினைத்தாலே கசப்பாக உள்ளது!

படம்
6/5/2023 அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். நலமா? தோல் பிரச்னை எப்படி இருக்கு? சிகிச்சை மேற்கொள்ள பொருளாதாரம் உள்ளதா? கடிதம் எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அடிக்கடி டெலிகிராமில் பேசுவதால் முறையாக கடிதம் எழுதவில்லை. தீராநதியில் பேட்டி கொடுத்த இந்திரா சௌந்தர்ராஜனைப் பற்றி நீங்கள் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. பல எழுத்தாளர்களும் ராயல்டி விஷயத்தில் ஏமாற்றப்படுவது கசப்பாக உள்ளது.  நேற்று (5/5/2023) எடிட்டரிடம் பேசினேன். திங்கட்கிழமை தாய் நாளிதழுக்கு எழுதும் ஒரு பக்க கணக்குப் புதிர்களை புத்தகமாக போடுவது சம்பந்தமாக. ‘’நிறுவனப் பதிப்பகத்தில் போடலாம்’’ என்றார். நான்,’’ வேண்டாம் சார். வேறு பதிப்பகத்தை நண்பர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்’’ என்று சொன்னேன். எடிட்டரும் நான் கூறிய பதிப்பகத்தில் இலக்கிய நூலொன்றை எழுதியிருப்பதாக கூறினார். மேலும், அங்கு இலக்கியம் சார்ந்த புத்தகங்களே அதிகம் விற்கும் என்றும், கணக்கு புத்தகங்களை கமர்ஷியல் பதிப்பகத்தில் போட்டால்தான் சரியாக இருக்கும் என்றார். உண்மையா சார்? சமீபத்தில், மாணவர் இதழுக்கு இன்டர்ன்ஷிப் வந்த இளம்பெண், இதழில் உதவி ஆசிரியராக இணைந்தார். கூடுதலாக 23

வரலாற்றை மாற்றும் அதிகாரம்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  pinterest முருகானந்தம் அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? நேற்று காலை மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் நல்ல கனமழை. நான் மழைக்கு முன்னமே ஆபீஸ் போய்விட்டேன். பட்டம் பதிப்பக பணிகள் இருந்தன. கூட்டுறவு வங்கிகளின் வீழ்ச்சி, உரிமம் ரத்து ஆகிய செய்திகளை படிக்க வேண்டியதுள்ளது. இவற்றையும் நூலில் இணைத்துவிடுவேன். நூலை எழுத தமிழ் இணையப் பல்கலைக்கழக வலைத்தளம் உதவியது. இதில் ஏராளமான நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இத்தகவல் முன்னமே தெரிந்திருந்தால் தொடராக எழுதும்போதே சிறப்பாக எழுதியிருக்கலாம். பரவாயில்லை. நூலாக எழுதி தொகுக்கும்போது, வலைத்தளம் உதவியது என வைத்துக்கொள்ளலாம்.  நகுலன் கதைகள் கொண்ட நூல் தொகுப்பை முத்து மாரியம்மன் பழைய பேப்பர் கடையில் நாற்பது ரூபாய்க்கு வாங்கினேன். ஒரு கதை மட்டுமே படித்தேன். இனிமேல்தான் நூலை முழுமையாக படிக்க வேண்டும்.  இந்தியாவைப் பற்றிய ஆய்வுச்செய்திகளை தேசிய ஆங்கிலமொழி இதழ்கள் சிறப்பாக உழைத்து எழுதுகிறார்கள். கட்டுரைகளை படிக்கும்போதே அதை அறிய முடிகிறது. உங்கள் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள்.  அன்பரசு 22.8.2021 -

உரையாடல்களை சிறப்பாக அமைத்த கு.ப.ரா! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என். சிவராமன் அவர்களுக்கு, வணக்கம்.  நான்கு மாதங்களுக்குப் பிறகு உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி. பள்ளி தொடங்கியதும் எங்களுக்கு தினசரி வேலைகளின் அழுத்தம் கூடிவிடும்.நாங்கள் செய்து வரும் நூல்களின் தொகுப்பு வேலைகள் படு சுணக்கமாகவே நகருகின்றன. தினசரியில் தொடர்கள் எழுதக்கூடாது என்பது பொறுப்பாசிரியரின் உத்தரவு. இதனால் நூல்களை புதிதாக எழுதி தொகுக்கவேண்டியுள்ளது. இதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. நூல்களை விற்பதற்கு ஏற்ப தயாரிக்க அதிக மெனக்கெடல் தேவை. பல நல்ல ஐடியாக்களை கூட தினசரி இதழில் அதிக தூரம் பயன்படுத்த முடியவில்லை.  ஒருவகையில் அதனை அந்தளவேனும் பயன்படுத்த முடிகிறது என்பதே மகிழ்ச்சிதான். நேருவின் போராட்டகால சிந்தனைகளில் விடுபட்ட சில அத்தியாயங்களைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். கு.ப.ராவின் வேரோட்டம் என்ற குறுநாவலைப் படித்தேன். கதையை நகர்த்திச்செல்லும் கருவியாக உரையாடல்கள் நன்றாக அமைந்துள்ளன.  பொதுமுடக்க காலத்தில் கிடைத்த நேரத்தில் அசுரகுலம் குற்றங்களின் பின்னணி பற்றிய நூலை மட்டுமே எழுத முடிந்தது. மருத்துவம் தொடர்பாக ஏதாவது நூல்களைப் படிக்கவேண்டும். விரைவில் இந்த ஆண்டிற