இடுகைகள்

செடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நகரத்திலுள்ள பசுமை பரப்பு - வெர்டிகல் ஃபாரஸ்ட்

படம்
  கட்டடத்தில் காடு! இன்று காடுகளின் பரப்பு வெகுவாக குறைந்துவருகிறது. நகரங்களுக்குள் காடுகளை உருவாக்குவதற்கான இடம் குறைந்ததால், பசுமையை கட்டடங்களில் ஏற்றிவிட்டனர்.  பசுமை கட்டடங்கள் என்று கூறப்படும் கட்டடங்களில் பல்வேறு செடிகள், மரங்கள், கொடிகள் வளர்க்கப்படுகின்றன. இவை, வெர்டிகல் ஃபாரஸ்ட் என்று அழைக்கப்படுகின்றன.  இத்தாலியின் மிலனில், மரம், செடி கொடிகளை வளர்க்கும் கட்டடங்கள் பராமரிக்கப்படுகின்றன. இவை ஓரளவுக்கு நகரில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறது.  ஒளிச்சேர்க்கை காரணமாகவே, மாசுபாட்டை அதிகரிக்கும் வாயுவை தாவரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.  நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம்  நகரில் அலுமினிய டவர் ஒன்று உருவாக்கப்பட்டது. இது மக்கள் புழங்கும் பூங்காக்களில் வைக்கப்பட்டது. மாசுபாடுள்ள காற்றை இக்கருவி, சுத்திகரிக்கிறது. காபி தயாரிக்கும் இயந்திரத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி மாசுபாட்டு சுத்திகரிப்பு கருவி செயல்படுகிறது. தாவரங்களின் வளர்ச்சிக்கு  கார்பன் டை ஆக்சைடு  முக்கியமானது. நீர், சூரிய ஒளி ஆகியவற்றை கூடுதலாக பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை செய்து உணவு தயாரிக்கிறது.  super science encyclopedia