வணிகத்திற்காக நடந்த போர்!
பாயும் பொருளாதாரம் 14 போர் எப்படி தொடங்குகிறது? போர் தொடங்கி நடப்பதற்கு அரசியல், வரலாறு, உளவியல் காரணங்கள் உண்டு. போருக்கு பின்னணியில் பொருளாதாரமும் உள்ளது. தொன்மைக் காலத்தில் ரோம் நாடு,போர் செய்து தன்னை செல்வாக்காக சொகுசாக வைத்துக்கொண்டது. சுரங்கம், பயிர் விளையும் வயல்கள், சொகுசு பொருட்கள் என பலவும் போர் காரணமாக அந்த நாட்டுக்கு சொந்தமாயின. இன்றும் கூட அமெரிக்கா பல்வேறு நாடுகளின் ஜனநாயகம் பற்றி அக்கறைப்படுவதற்கு அந்நாட்டிலுள்ள கனிமங்கள், எரிபொருள் வளங்களே முக்கியக் காரணம். அமெரிக்கா மட்டுமல்ல உலக வல்லரசு நாடுகள் பலவும் ஏதேனும் ஒருவகையில் பலலவீனமான நாடுகளை தன்னுடைய காலனியாக்கிக்கொள்ள துடிக்கின்றன. கடன் கொடுத்தோ, ராணுவ ஆதரவு கொடுத்தோ தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்கின்றன. இந்த வகையில் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் அடியாட்கள் போல மாறிவிட்டன. இங்கிலாந்து அபினியை சீன மக்களுக்கு கொடுத்து சட்டவிரோத வணிகம் செய்தே அந்த நாட்டிற்குள் சுதந்திரமாக வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றது. இதை தடுக்க முயன்ற சீன பேரரசர்களோடு 1839,1856ஆகிய காலகட்டங்களில் போர் செய்யவும் தயங்கவில்லை. ...