இடுகைகள்

சினிமா விமர்சனம், அனிமேஷன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆவியுலக குடும்பத்தை நகர மக்கள் ஏற்கும் கதை! - தி ஆடம்ஸ் ஃபேமிலி - அனிமேஷன்

தி ஆடம்ஸ் ஃபேமிலி இயக்கம் - கான்ராட் வெர்னன் , கிரேக் தியர்னன் திரைக்கதை - மேட் லைபெர்மன் கதை - மேட் லைபர்மன் , கான்ராட் வெர்னன் , எரிகா ரிவினோஜா கதாபாத்திர உருவாக்கம் - சார்லஸ் ஆடம்ஸ் இசை - மிச்செல் டன்னா டெஃப் டன்னா ஆடம்ஸ் ஃபேமிலி என்பது அனிமேஷன் படம் . ஆடம்ஸ் குடும்பம் என்பது கோம்ஸ் ஆடம்ஸ் , மார்ட்டிசியா , வெட்னஸ்டே , பக்ஸ்லி என்ற ஆவியுலக குடும்பம் பற்றியது . இவர்கள் இரவில் வாழ்பவர்கள் . யாரையும் தொந்தரவு செய்பவர்களல்ல . ஆனால் இவர்களின் திகில் தரும் உடை , சடங்குகளால் இவர்கள் வாழும் ஊரில் துரத்தப்படுகிறார்கள் . எனவே கோம்ஸ் , மார்டிசியா திருமண விழாவில் நடக்கும் ஊராரின் களேபரத்தால் வாழ்ந்த ஊரை விட்டு தொலைதூரம் தள்ளிச்செல்ல நேரிடுகிறது . நியூஜெர்ஸி செல்லும் வழியில் ஒரு விபத்து நேரிடுகிறது . மனநல நோயாளி ஒருவர் மீது மோதிவிடுகிறார்கள் . அவர் வாழ்ந்துவந்த இடம் படுமோசமாகவும் , தனியாகவும் இருக்க அங்கேயே இடம்பெயர்கிறது ஆடம்ஸ் குடும்பம் . அங்கு அவர்கள் அடிக்கும் லூட்டிதான் படம் . ஆடம்ஸ் மொத்த குடும்பமே திகில் ஏற்படுத்துபவர்கள்தான் . நிறமே இல்லாத கருப்பு நிற உடைகளை மட்டும் உ