இடுகைகள்

ஸ்னோ அண்ணா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தந்தையின் அன்பைப் பெற முயலும் துரதிர்ஷ்டமான மகனின் காமெடி வாழ்க்கை! லக்குன்னாடு - விஷ்ணு மஞ்சு, ஹன்சிகா

படம்
  லக்குன்னாடு விஷ்ணு மஞ்சு, ஹன்சிகா மோத்வானி தெலுங்கு அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் பற்றிய கதைதான் படம். சிறுவயதில் ஜெயப்பிரகாஷூக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை பிறந்த நேரம் நல்ல செய்தி வந்தாலும் அதற்கடுத்த சில மணி நேரங்களிலேயே அதை விட மோசமான செய்தி ஒன்றை கேட்கும்படி சூழல் உருவாகிறது. பொதுவாகவே மனிதர்கள் சூழலைப் பொறுத்து கருத்துகளை மனதில் பதித்துக்கொள்பவர்கள்தானே, ஜெயப்பிரகாஷூம் தன் பையன் தனக்கு மோசமான சூழ்நிலையை உருவாக்கிவிட்டான் என நம்பத் தொடங்குகிறார். இதன் விளைவாக லக்கி என்று தான் சூட்டிய பெயரைக் கூட வாய் வழியாக சொல்லி கூப்பிடுவதில்லை என முடிவெடுக்கிறார். அம்மா, தங்கை பிரியமாக நடத்தினாலும் அப்பாவிடம் எந்த பாசமும் கிடைப்பதில்லை. வெறுப்பு லக்கியை சங்கடப்படுத்த அவன் நகருக்கு வருகிறான். பெரிதாக படிக்கவில்லை என்பதால் குறைந்தபட்சம் ஏதேனும் நிறுவனத்திற்கு சென்றால் தனது வாழ்க்கை விடியும் என நம்புகிறான். ஆனால் அதுவும் சொதப்ப தற்கொலை செய்யும் முடிவை எடுக்கிறான். ஆனால் அவனது குணத்திற்கான பரிசு போல திருடன் ஒருவன் ஏடிஎம் பணம் ஒன்றைத் திருடி லக்கியிடம் ஒப்படைக்கிறான். அதேநேரம் லக்கி