இடுகைகள்

சாண்ட்ரா டயஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’ சாண்ட்ரா டயஸ், அர்ஜென்டினாவைச் சேர்ந்த இயற்கை ஆராய்ச்சியாளர், கார்டோபா தேசிய பல்கலைக்கழக பேராசிரியர். சூழலியல் மற்றும் இயற்கை பன்மைத்தன்மை ஆராய்ச்சியில் தவிர்க்க முடியாத ஆளுமை. 2025ஆம் ஆண்டு க்கான சுற்றுச்சூழல் அறிவியல் சாதனைக்கு வழங்கப்படும் டைலர் விருதை மானுடவியலாளரான எடுவர்டோ பிரான்டிசியோவுடன் இணைந்து பெறவுள்ளார். தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த இருவர் டைலர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. டைம் வார இதழில் 2025 ஆம் ஆண்டில் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரிகளில் உங்களது வாழ்க்கை எப்படி சென்றது, சூழல் ஆராய்ச்சியை உங்களது இலக்காக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? பள்ளி, கல்லூரி காலம் இன்னும் மறக்காமல் நினைவிலிருக்கிறது. தொடக்க, உயர்கல்வியை சிறு நகரத்தில் படித்தேன். பிறகு, கார்டோபா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தேன். என்னுடைய பதினேழு வயதில் கல்விக்காக பெருநகரத்திற்கு வந்தது சாகசமாகவும், அதேசமயம் சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும்...