இடுகைகள்

பாஸ்வேர்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாஸ்வேர்டால் பணயக் கைதியாகும் வாழ்க்கை

படம்
  பாஸ்வேர்ட்டால் வதைக்கப்படும் வாழ்க்கை  ஒவ்வொருமுறை விண்டோஸ் ஓஎஸ்ஸை எஸ் ஆர் எலக்ட்ரிகலுக்கு எடுத்துச்செல்லும்போதும் நான் மறந்துவிடும் விஷயம் ஒன்றுண்டு. அதுதான் பாஸ்வேர்ட். விண்டோஸ் கணினியில் இணையத்தில் இணைத்தால் மைக்ரோசாஃப்ட் அக்கவுண்டிற்கென தனி பாஸ்வேர்ட் உண்டு. பிறகு, கணினிக்கென தனி பாஸ்வேர்ட் உண்டு. இதை பதிவு செய்து மொபைலில் வரும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிந்து கணினியை இயக்குவதற்குள் வாயில் நுரைதள்ளிவிடும். அந்த நேர பதட்டத்தில் பாஸ்வேர்டுகள் நினைவுக்கு வந்து தொலைவதில்லை என்பதுதான் தனித்துயராக மாறுகிறது. கணினி பழுதுபார்க்கும் அண்ணனோ, பாஸ்வேர்டை இந்த முறையும் மறந்துவிட்டாய்தானே என கிண்டலாக பார்ப்பது மாறவே இல்லை. இதன் பிரச்னைகளைப் பார்ப்போம்.  லினக்ஸ் ஓஎஸ்ஸைப் பொறுத்தவரையில் அவர்கள் இயங்குவதே பாஸ்வேர்டில்தான். அதை வைத்துத்தான் டெர்மினலை இயக்க முடியும். மென்பொருட்களை இன்ஸ்டால் செய்யமுடியும். ஜினோமில் உங்கள் கணக்கு தொடங்க, கூகுள் கணக்கை இணைத்தால் போதுமானது. அப்போதுதான் இதற்கு தனியாக பாஸ்வேர்ட் கேட்கவில்லையே என மனம் நிம்மதி அடைந்தது. இது கொஞ்சம் ஆறுதலான ஓஎஸ்.  இணையத்தில் இயங்க கூகுள் மெய

மொழியைக் கற்க, டைப் அடிப்பதை வேகமாக்க, கலரிஸ்டாக பயிற்சிபெற உதவும் புதிய ஆப்ஸ்கள்!

படம்
              புதிய ஆப்ஸ்கள் புதிய ஆப்ஸ்கள்தான் . ஆனால் அத்தனையும் பயன்படும் என்று சொல்லமுடியாது . சுமாரானவை மிகச்சுமாரானவை என்று கூட எடுத்து எழுதிவிடுகிறார்கள் . எனவே படித்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் . ரீகலர் தி ரீப் ஆப்போ நிறுவனம் நிதியளித்து உருவாக்கி ஆப் . பயன் என்று பெரிதாக ஒன்றுமில்லை . இதனை டவுன்லோடு செய்து போனில் வைத்துக்கொண்டு பவளப்பாறைகளைப் பார்க்கலாம் . இதனை அதிகளவு டவுன்லோடு செய்தால் , கிடைக்கும் நிதி பவளப்பாறைகளை காப்பாற்ற பயன்படுத்தப்படுமாம் . இதற்காக எத்தனைபேர் இதனை டவுன்லோடு செய்வார்கள் என்று தெரியவில்லை . ராக் ஐடென்டிபையர் நாம் வாழும் இடத்தில் பல்வேறு தன்மையிலான கற்கள் கிடைக்கும் . ஆனால் அதன் வகைகளைப் பற்றி நாம் பெரிதாக அறிந்திருக்க மாட்டோம் . ஆனால் அப்படி அறிந்துகொண்டால் நன்றாக இருக்கும்தானே ? அதற்குத்தான் இ்ந்த ராக் ஐடென்டிபைர் உதவுகிறது . பெரும்பாலான பாறைகளின் பெயர்களையும் , அதன் சிறப்புகளையும் கூறுகிறது . சிலசமயங்களில் புகைப்படங்களை தவறாகவும் அடையாளம் காட்டுகிறது . கற்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கான ஆப் இது .