இடுகைகள்

க்வெர்ட்டி கீபோர்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

க்வெர்ட்டி கீபோர்டு எப்படி சந்தையில் வென்றது?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி க்வெர்ட்டி கீபோர்டை நாம் பயன்படுத்துவது எதற்காக? படத்தில் உள்ள டிசைனைப் போன்ற கீபோர்டைப் பயன்படுத்தித்தான் பல இலக்கியச் செல்வங்களை நவீன எழுத்தாளர்கள் உருவாக்கி வருகின்றனர். ஏனென்றால் இந்த வடிவம்தான் தட்டச்சுப்பலகையில் உள்ளது. விக்கிப்பீடியா இம்முறை டைப் செய்ய சரியாக உள்ளது என்று கூறமுடியாது. ஆனால் தற்போது கீபோர்டு என்பதே பெரும்பாலும் க்வெர்ட்டி முறையைத் தான் பின்பற்றுகின்றன. 1860 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் லதாம் ஷோல்ஸ் என்ற டெக் மனிதர், இதுபற்றிய ஆராய்ச்சி செய்து வந்தார். ஏராளமான லே அவுட் விஷயங்களை வைத்து, எது அலுவலகத்திற்கு பயன்படும் என்று ஆராய்ச்சிகள் செய்து வந்தார். இறுதியாக 1867ஆம் ஆண்டு தனது லேஅவுட் ஒன்றை உருவாக்கி அதற்கு காப்புரிமையும் பெற்றார். இன்று நாம் பயன்படுத்தும் கீபோர்ட் ஏறத்தாழ ஷோல்ஸின் வடிவத்தை ஒத்ததுதான். அவரின் முதல் கீபோர்ட் அகரவரிசைப்படி உருவாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக டைப் செய்ய பலரும் எழுத்துக்களைத் தேடிக்கொண்டு இருந்தனர். அப்போது மோர்ஸ் கோட் ரகத்திலும் டைப் செய்துகொண்டிருந்தனர். எனவே எஸ், இ, இசட் ஆகிய எழுத்துகள்