இடுகைகள்

ஈஷா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பக்தகோடிகளை நம்பித் தொடங்கப்படும் சாமியார்களின் கார்ப்பரேட் நிறுவனங்கள்! - பக்தியில் கொள்ளை லாபம்

படம்
  மருத்துவப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்களை விற்க சினிமா பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள். அத்தோடு கூடுதலாக, துறை சார்ந்த மருத்துவர்களையும் பெருநிறுவனங்கள் பேச வைக்கின்றன. இதனால், மக்களுக்கு இந்த பொருட்களின் மீதுள்ள சந்தேகங்கள் குறையும். பால் சார்ந்த ஊட்டச்சத்து பானங்களில் சர்க்கரை அதிகம் இருக்கும். ஆனால், உண்மையில் அவர்கள் பாட்டிலில், பாக்கெட்டில் அச்சிட்டுள்ள அளவை விட அதிகமாக சர்க்கரை சேர்க்கிறார்களா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. மேற்குலகில் எப்படியோ, இந்தியாவில் இதுபற்றிய பொது அறிவு என்பது மிகவும் குறைவு. இதுதொடர்பான உண்மையை இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கில் உள்ளவர் ஆராய்ச்சி செய்து வெளிக்கொண்டு வந்தால் கூட ஊட்டசத்து பான நிறுவனங்கள், குறிப்பிட்ட ஆய்வாளர் மீது வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு இழுப்பார்கள். ஊட்டச்சத்து பானங்கள், காபித்தூளை விற்கும் நிறுவனங்கள் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கு நிதியளித்து தங்களது விற்பனை பொருட்கள் சார்ந்த ஆய்வுகளை செய்ய வற்புறுத்துகிறார்கள்.   இதன்மூலம் காபி அல்லது ஊட்டச்சத்து பானம் பற்றிய எதிர்மறை செய்திகள் குறைந்து நேர்மறை செய்திக