இடுகைகள்

லயன்காமிக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிபர் தேர்தல் வேட்பாளரை ஜெயிக்க வைக்க நூதன சதிகள் - கத்தியில்லாத யுத்தம்!

படம்
லயன் முத்து காமிக்ஸ் டிடெக்டிவ் காரிகன் தோன்றும் கத்தியில்லாத யுத்தம் காரிகன் மிகத்திறமையானவர்தான். ஒவ்வொரு முறையும் அவருக்கு சவாலான விஷயங்களை உளவுத்துறையும்தான் எப்படித் தரும்? இப்படி நினைத்து கதையை சுமாராக கொடுத்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓமர் என்ற அரசியல் தலைவர் நிற்கிறார். ஆனால் அவருக்கு தான் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில்லை. நேர்மையானவர்தான், அதனால்தான் அவர் வெல்ல வாய்ப்பில்லை என்று அவருக்கு புரிந்துவிடுகிறது. அவருக்கு கொலை மிரட்டல் கடிதம் உளவுத்துறைக்கு சில சமூகவிரோதிகள் அனுப்பி வைக்கின்றனர். உடனே உளவுத்துறை தலைவர் காரிகனை அழைத்து ஓமரைப் பாதுகாக்கும் வேலையைக் கொடுக்கிறார். காரிகனுக்கு இதுபோல ஏப்பை சாப்பையான வேலைகளில் இஷ்டம் கிடையாது. இருந்தாலும் மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது என்பதால் கொட்டாவியை அடக்கியபடி வேலைக்குப் போகிறார்., அங்கு பார்த்தால் ஓமரின் மகள், ஓமரை பாதுகாக்கும் பிரிக்ஸ் என்ற மெய்க்காப்பாளன் ஆகியோர் காரிகனை கண்டபடி பேசி மனத்தை குலைக்க பார்க்கிறார்கள். காரிகன் அங்கு நடைபெறும் கைகலப்பில் பிரிக்ஸை தூக்கி வீசி விடுகிறார். பின் அனைவரிடமும் மன்னிப்பு கேட

பழங்குடி மக்களை வேட்டையாடி ரத்தம் குடிக்கும் மர்மத் தாவரம் - மரணமுள் காமிக்ஸ்

படம்
லயன் முத்து காமிக்ஸ் டெக்ஸ் வில்லர் - கார்சன் துப்பறியும் மரணமுள் பழங்குடிகள் வாழும் இடத்தில் நடக்கும் விண்கல் மோதலும் அதன் பொருட்டாக அவர்களுக்கு நேரும் ஆபத்துகளும் தான் கதை. விண்கல் பழங்குடிகள் வாழும் இடத்தில் வந்து மோதுகிறது. அதில் ஒட்டிக்கொண்டு வரும் வேற்றுகிரகவாசி தாவரம், உருண்டையாக முட்களை கொண்டுள்ளது. இது பிற உயிர்களைக் கொன்று அதன் ரத்தத்தைக் குடித்து வாழும் பழக்கம் கொண்டது. முதலில் தாவரம்தானே பலரும் நினைத்துவிட, இரவுகளில் பழங்குடி மக்களை வேட்டையாடத் தொடங்குகிறது. இதன் காரணமாக பலரும் வெயிலில் காய வைக்கப்பட்ட கருவாடு போல ரத்தம் இழந்து பலியாகின்றனர். இதனை இரவுக்கழுகு டெக்ஸ் வில்லருக்கு பழங்குடி மக்களின் தலைவர் தெரிவிக்கிறார். டெக்ஸ் வில்லர் இந்த பிரச்னையை அவருக்கு தெரிந்த டாக்டர் ஒருவரிடம் கொண்டு சென்று தீர்வு தேடி மக்களைக் காப்பாற்றுவதுதான் கதை. டெக்ஸ் வில்லருக்கு இதில் ஆக்சன் காட்சிகள் ஏதுமில்லை. வருகிறார். ஆராய்கிறார். முள் உருண்டைகளை எடுத்துக்கொண்டு டாக்டரிடம் செல்கிறார். அவர் கொடுக்கும் எச்சரிக்கை மட்டுமே காமிக்சில் ஆறுதலாக இருக்கிறது. மற்ற விஷயங்களை அவரோடு பணிபுரியும் பிறர் த

போதைக்கம்பள கும்பலை அழிக்கும் சிக்பில் அண்ட் கோ! - ஜாலி காமிக்ஸ்

படம்
பிளேட்பீடியா சிக்பில் மற்றும் குள்ளன் கலக்கும்  கம்பளத்தில் கலாட்டா லயன் காமிக்ஸ் - 40ஆவது ஆண்டு மலர்!  சிக்பில் அண்ட் கோ, இம்முறை வித்தியாசமான வழக்கை தீர்க்கின்றர். சீரியசாக அல்ல ஜாலியாகத்தான். போதைப்பொருட்களை விற்பவர்கள் செவ்விந்தியர்களை மதுபானங்களை வாங்கச்செல்லி கெஞ்சுகிறார்கள். பின்னர் மிரட்டுகிறார்கள். ஆனால் சிக்பில் சாம, பேத, தண்ட முறையில் அதனை சமாளிக்கிறான். ஆனால் அவர்கள் அதற்கு அஞ்சாமல் ஊருக்குள் வந்துவிடுகின்றனர். அங்குள்ள சீனா பஜார் போல பொருட்களை விற்கும் முஸ்தபாவை மிரட்டி தங்களின் போர்வையை விற்க வற்புறுத்துகின்றனர். இல்லையெனில் கடையை எரிக்கவும் அவர்கள் தயங்க மாட்டோம் என எச்சரிக்கின்றனர். அந்தப் போர்வையை பயன்படுத்திய ஷெரீப்பின் கையாள், அதிலுள்ள போதைப்பொருளால் மயங்கி புத்தி கலங்குகிறது. இதனைக் கண்டறிய சிக்பில் அண்ட் கோ, கோழையாக ஷெரீப்பின் பின்னால் அணிதிரள நடக்கும் காமெடி சரவெடிகள்தான் கதை.  இதில் அதிரடி சண்டைகளை எதிர்பார்க்க ஒன்றுமில்லை. அனைத்தும் காமெடிதான். இதனால் சீரியசான போதைப்பொருள் சங்கதி கூட அப்படியா என்றுதான் கேட்க வைக்கிறது. ப

பிரபஞ்ச புதல்வனுக்கு நேரும் சவால்கள்! - தோர்கல்

படம்
பிரபஞ்சத்தின் புதல்வன் - தோர்கல் வண்ணம் - ரோசின்ஸ்கி - எண்ணம் - வான் ஹாமே வைகிங்குகளால் வளர்க்கப்படும் தோர்கல் என்ற வீரனின் கதை. மனோதிடமும், வீரமும் கொண்டவனை கான்டல்ஃப் என்ற வைகிங் தலைவர் கடலின் நடுவிலுள்ள பனிக்கட்டியில் கட்டிவைத்து கொல்ல நினைக்கிறார். என்ன காரணம் காதல்தான். தலைவரின் மகள் ஆரிஸியாவை தோர்கல் காதலித்தார். இது கான்டல்ஃப்புக்கு தெரியவர அவர் தோர்கல்லை வைகுண்டத்திற்கு அனுப்ப நினைக்கிறார். இதற்காகத்தான் அந்த கொடூர தண்டனை. தோர்கல் இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க பெயர் தெரியாத ஒற்றைக்கண் கொண்ட பெண் ஒருவள் உதவுகிறாள். ஆனால் தன்னைப் பற்றி எதையும் அவள் தோர்கல்லிடம் பகிர மறுக்கிறாள். அவள் யார், அவளுக்கும் கான்டல்ஃப்பிற்கும் உள்ள தொடர்பு, ஆரிஸியாவை தோர்கல் சந்தித்தாரா என்பதுதான் காமிக்ஸின் மீதியுள்ள கதை. பார்பேரியன் ரக படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த காமிக்ஸை ரூ.60 கொடுத்து வாங்கிப் படிக்கலாம்.

கடல் தங்கத்தை மீட்கிறாரா ப்ரூனோ பிரேசில் - லயன்காமிக்ஸ்

படம்
சாக மறந்த சுறா லயன் காமிக்ஸ் ரூ.60 ஓவியர் - வில்லியன் வான்ஸ் - கதை க்ரெக் ப்ரூனோ பிரேசில் அதிரடிக்கும் கதை. அட்டைப்படத்தில் ஹீலியம் பலூன் அதிலிருந்து இறங்குவது போன்ற படம் இருந்தாலும் கதையில் அதுபோன்ற சம்பவங்கள் ஏதும் இல்லை. நாஜி ஜெர்மனி போரில் ஈடுபட்ட காலத்திற்கு கதை செல்கிறது. போரில் ஈடுபட்ட கப்பல் ஒன்று தங்கத்துடன் கடலில் குறிப்பிட்ட இடத்தில் கவிழ்ந்துவிடுகிறது.அதில் நாஜிப்படையினர், பெட்டி பெட்டியாக தங்கத்தை வைத்திருக்கின்றனர். அது பற்றி செய்தியை ஒருவர் கசியவிட உலகநாடுகள் அனைத்தும் உளவுத்துறையை உசுப்புகின்றன. கடலில் கிடக்கும் தங்கத்தை எடுக்கும் முயற்சிகள்தான் கதை. அமெரிக்காவில் நடக்கும் கார் விபத்து இதற்கு தூண்டுதலாகிறது. விபத்தில் காரில் பயணிக்கும் இருவர் பேருந்தோடு மோதி அங்கேயே இறந்து விடுகின்றனர். அதில் தப்பிப்பவர் முன்னாள் நாஜி தளபதி. இதுபோதாதா ப்ரூனோ பிரேசில் இந்த விவகாரத்தில் உள்ளே நுழைய? கதை தொடங்குகிறது. அங்கு உள்ள உளவுத்துறையினர் போட்டியைத் தவிர்க்க பிற நாட்டு ஆட்களை போட்டுத்தள்ளத் தொடங்குகின்றனர். அதில் முதல் முயற்சியில் தப்பிக்கும் ப்ரூனோ பிரேசில்,

நினைவுகளைத் தேடும் குற்றவாளி! - ரத்தப்படலம் காமிக்ஸ் அதிரடி!

படம்
ரத்தப்படலம்! 1-18 முத்து காமிக்ஸ் ரூ. 200 அமெரிக்க அதிபர் பதவிக்கு யார் வருவது எனும் போட்டியில் நடக்கும் பல்வேறு துரோகங்கள், கொலைகள் ஆகியவற்றை ஒட்டி உருவான கதாபாத்திரம்தான் பதிமூன்று. முதல் காட்சியில் தலையில் சுடப்பட்டு வயதான பெண்மணியால் காப்பாற்றப்படுபவர்தான் நாயகன். தான் யார் என்று அறிய முயற்சிக்கும்போது, அவர் யார் என்ற உண்மைகள் தெரிய வருகின்றன. இவரைக் கொல்ல சிஐஏ, எஃப்பிஐ, மங்கூஸ் எனும் கூலிக்கொலைகாரன் ஆகியோர் பலரும் தேடி வருகின்றனர். அதேசமயம், பதிமூன்று என்பவருக்கும் சிஐஏ தலைவரான ஜியோர்டினோ என்பவருக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. அவர் பதிமூன்றை ஏதோ ஒரு வழியில் துரத்திக்கொண்டே இருக்கிறார். அந்த உறவு என்ன? பதிமூன்று என தோளில் அச்சிடப்பட்டிருப்பதன் பொருள், அவர் மனைவியாக சொல்லப்படும் கிம் என்னவானாள், வாலி ஷெரிடன் கொலைக்கு காரணம் என அனைத்து மர்மங்களும் பதினெட்டு அத்தியாயங்களில் விடுவிக்கப்படுகிறது. எந்த அத்தியாயங்களையும் படிக்காமல் உங்களால் இறுதிப்பகுதியை எட்ட முடியாது. எனவே எடுத்தவுடனே கிளைமேக்ஸை படிக்க முயற்சிக்காதீர்கள். சிலந்திவலை போன்ற காமிக்ஸ் இது. எந்த இட