இடுகைகள்

ஜெயின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதிய உணவுத்திட்டம் - இன்றைய நிலை

படம்
  சேலம் மாவட்ட மதிய உணவு திட்டம், தமிழ்நாடு 1 கர்நாடக மாநிலம் பதிமூன்றாவது மாநிலமாக தனது மதிய சத்துணவு திட்டத்தில் முட்டையை சேர்க்கவுள்ளது. அண்மையில் வெளியான தேசிய குடும்ப நல ஆய்வில், ஐந்து வயதுக்குள் உள்ள சிறுவர்கள் சரியான ஊட்டச்சத்து இன்றி இருப்பதாக கூறியிருந்தது. இந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் 35 சிறுவர்கள் உள்ளனர். இப்பாதிப்பில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இறந்துபோகவும் வாய்ப்புள்ளது. இந்த வகையில் 20 சதவீதம் பேர் உள்ளனர்.  ஆனால் எப்பாடு பட்டாலும் அரசு சத்துணவில் முட்டையை சேர்க்க கூடாது சில கருத்தியல் மதவாத கும்பல்கள் குறுக்கீடு செய்து வருகின்றனர்.  தற்போது உள்ள மதிய சத்துணவு திட்டம்  பிஎம் போஷான் சக்தி நிர்மாண் என்ற திட்டத்தின் கீழ் வருகிறது. 2021ஆம் ஆண்டு அமலான தேசிய திட்டம் இது. இதற்கான மூலத்திட்டம் 1995ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது.  இந்த மதிய உணவு திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி செய்கிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட திட்டம் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கானதாக இருந்தது. 2007இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இதனை எட்டாம் வகுப்பு வரை நீட்டித்தது.  1920ஆம் ஆண்டு மெட்ர

குழந்தைகள் ஊட்டச்சத்தான முட்டையை பெறுவதை தடுக்கும் ஜெயின் அமைப்புகள்!- முட்டை அரசியல்

படம்
              முட்டையில் அரசியல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் மத்திய பிரதேச மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் துறை அமைச்சர் இமார்த்தி தேவி, முக்கியமான சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். ஆறுமாத குழந்தைகள் முதல் ஆறுவயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முட்டைகளை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார். மத்திய பிரதேச மாநில குழந்தைகள் கடுமையான ஊட்டச்சது பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் உணவு அரசியலும் உண்டு. பாஜக ஆளும் மாநிலங்கள் எதிலும் முட்டை மதிய உணவில் வழங்கப்படுவதில்லை. சுத்த சைவம்தான். இதனை தங்களது கருத்தியல் சார்ந்த அரசியலாகவே பாஜகவினர் செய்கிறார்கள். இம்ராதிதேவி திடீரென மத்திய பிரதேசத்தில் முட்டை வழங்க காரணம் என்ன? அங்கு விரைவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலும் முக்கியமான காரணம். பாஜவில் சேர்ந்துள்ள ஜோதிராதித்யா சிந்தியாவின் விசுவாசி இவர். ஆனால் கமல்நாத் அரசில் அமைச்சராக பதவி பெற்று வேலை செய்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக இங்கு பதவியிலிருந்து பாஜக அரசு மதிய உணவு மற்று்ம அங்கன்வாடி மையங்களில் முட்டைகளை வழங்க ஒப்புக்கொள்ளவிலை. இப்போதும் கமல்நாத் அரசின் உத்தரவை தீவிரமாக எதிர்த்து வருகிறத