ஓமியோபதி மருத்துவ முறையை உருவாக்கியவரான சாமுவேல் ஹானிமன் வரலாறு!
மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை 1755ஆம் ஆண்டு, ஓமியோபதியை உருவாக்கியவரான சாமுவேல் ஹானிமன் பிறந்தார். பிறந்த தேதி ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி. இவரது தந்தை பீங்கானில் பல்வேறு ஓவியங்களை தீட்டும் திறமை கொண்ட கலைஞர். புனித ஆஃப்ரா என்ற பள்ளியில் செவ்வியல், நவீன மொழிகளைக் கற்றார். ஆங்கில மருத்துவமுறையை உருவாக்கியவரான ஹிப்போகிரேடஸின் மருத்துவ விளக்க நூல்களை படித்தார். அவரின் மருத்துவ தத்துவத்தை வைத்தே ஓமியோபதியின் மருத்துவத்தை உருவாக்கினார். ஒத்தது ஒத்ததை குணமாக்கும் என்பதே கொள்கை, ஒத்தது அல்லது எதிரானது நோயைத் தீர்க்கும் என ஹிப்போகிரேடஸ் கூறினார். 1775ஆம் ஆண்டு சாமுவேல், மருத்துவப் படிப்பை படிக்கத் தொடங்கினார். அவருக்கு வியன்னாவைச் சேர்ந்த மருத்துவர் பிளென்சிஸ் ஆதர்சமாக இருந்தார். அந்த காலத்தில் பிளென்சிஸ், மருத்துவத்தில் பல்வேறு சாதனைகளை செய்தவர். 1779ஆம் ஆண்டு ஆகஸ்ட் பத்தாம்தேதி, சாமுவேல் மருத்துவப்பட்டம் வென்றார். எர்லாங்கன் பல்கலைக்கழகம் அவருக்கு பட்டத்தை வழங்கியது. 1781ஆம் ஆண்டு சாமுவேல் மாவட்ட மருத்துவ அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். ஹென்ரிட் என்ற பெண்ணை திருமணம...