இடுகைகள்

செல்போன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சரச சல்லாப வீடியோ - கல்யாண நாளில் என்னாகும் நிலைமை?

படம்
மீக்கு மாத்திரம் செப்தா - தெலுங்கு இயக்கம் - சமீர் சுல்தான் ஒளிப்பதிவு - மதன் குணதேவா இசை சிவகுமார் போனில் செய்யும் சிறிய தவறு எப்படி கல்யாண நாளில் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதை எவ்வளவு ஜாலியாக சொல்ல முடியுமோ அவ்வளவு ஜாலியாக சொல்லியிருக்கிறார்கள். தருண் பாஸ்கர் இயக்காமல் நடித்திருக்கிற படம். படத்தில் ஒவ்வொரு அங்குலத்திலும் அவர் இவரும், அபினவ்வும் செய்யும் காமெடிகள்தான் படத்தைப் பார்க்க வைக்கின்றன. பட வாய்ப்புக்காக தருண் ஒரு உப்புமா இயக்குநரை சந்திக்கிறார். அந்த சமாச்சாரம் நடக்கும் வரையில் அவர் உப்புமா ஆள் என தருணுக்கு தெரியாது. படத்தில் தருணின் பெயர் ராகேஷ். அங்கு பார்த்தால், ஒரு பெண், ஒரு பெட், ஒரு லைட் என எல்லாம் மினிம மாகவே இருக்கிறது. யெஸ் ராத்திரி வீரன் ரக படம்தான். இதுதெரியாத தருண், காலை நீட்டிப்போட்டு... பெட்டில்தான். படுத்து தூங்கிவிடுகிறார். ஏசி காற்று தூக்கத்தை அள்ளித்தருகிறது. இவருக்காக சாப்பிட சோறு எடுத்துவரச் சென்ற பெண், இதனால் டென்ஷன் ஆகிறாள். அதனால் என்ன செல்போன் கேமராவை திருப்பிவைத்து உறங்கும் நிலையில் இயக்குநர் சொன்ன சமாச்சாரத்தை முடிக்கிறார

செல்போனில் அதிகரிக்கும் சூதாட்ட மோகம்! - இங்கிலாந்து மருத்துவமனையின் தீர்வு!

படம்
அதிகரிக்கும் அடிமைத்தனம்! செய்தி: ஸ்மார்ட்போன்களின் வழியாக திரைப்படங்கள், விளையாட்டு, டிவி தொடர்கள் ஆகியவற்றின் மீதான அடிமைத்தனம் அதிகரித்துள்ளதாக இங்கிலாந்து அரசின் ஆய்வுகள் கூறுகின்றன. இன்று பேருந்துகளிலும், கார்களிலும் செல்பவர்கள் அனைவருமே போனில் ஏதாவது செய்தியைப் பார்த்துக்கொண்டே செல்கிறார்கள். அது திரைப்படமாக, விளையாட்டாக அல்லது சமூகவலைத்தள பதிவாக கூட இருக்கலாம்.  மது, புகையிலை போன்ற அடிமைத்தனத்தை இவை ஏற்படுத்துகின்றன என்று உளவியலாளர்கள் கூறி வருகின்றனர்.  இங்கிலாந்து அரசு அமைப்பான கேம்ப்ளிங் கமிஷன் 2017 ஆம் ஆண்டு ஆய்வொன்றைச் செய்தது. இதில் 4 லட்சம் பேர்களுக்கு மேல் ஆப் வழியாக சூதாட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். தற்போது இளைஞர்களிடையே  இணையம் சார்ந்து அடிமைத்தனம் அதிகரித்துள்ளது. “அடிமைத்தனத்தைப் பழக்கம், பொருட்களை தொடர்ச்சியாக கவனமின்றி பயன்படுத்துவது என்றுகூட கூறலாம்” என்கிறார் அடிக்சன் எனும் பத்திரிகையின் ஆசிரியரும், புகையிலை ஆராய்ச்சியாளருமான ராபர்ட் வெஸ்ட். இணையம் சார்ந்த நெட்ஃபிளிக்ஸ் அமேசான் நிகழ்ச்சிகளைப் பார்த்தாலும் தினசரி நடவடிக்கைகளை அவை பாதிக்காத