இடுகைகள்

திமுக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திமுகவில் ஈடுபாடு ஏற்பட்டு அதில் ஏமாற்றம் கண்டு புத்தி தெளிந்த சம்பவங்களின் தொகுப்பு - வனவாசம் - கண்ணதாசன்

படம்
  வனவாசம்  கண்ணதாசன் கண்ணதாசன் பதிப்பகம் மின்னூல் வனவாசம், மனவாசம் என இரு நூல்களை கண்ணதாசன் எழுதினார். இதில் வனவாசம் அவரின் அரசியல் அனுபவங்களை வெளிப்படையாக பேசுகிறது. அவர் சினிமா, அரசியல் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் காலத்திலேயே எழுதிய நூல் என்பதால் வனவாசம் முக்கியத்துவம் பெறுகிறது. நூலைப்படித்தேன் என்று சொன்னபோது, நண்பர் ஒருவர், கண்ணதாசன் நம்ம ஊரு டால்ஸ்டாய் போல என்றார். டால்ஸ்டாயின் ஒழுக்க விதிகளைப்போலவே,  கண்ணதாசனும் பல்வேறு ஒழுக்க முறைகளை அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் கூறியிருக்கிறார். அதுவும் தன்னையே மோசமான எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு....  அவர் அதற்கு வெட்கமெல்லாம் படவில்லை.  வனவாசத்திலும் ஒழுக்கம் தவறுகிற,செய்ய வேண்டிய விஷயங்களை செய்யாமல் விடுகிற மாது விஷயங்கள் நிறைய உண்டு. சினிமா நடிகை, விபச்சார பகுதியில் விலைமாது, பிறகு அவரே ஏற்கும் இரண்டாவது ஏற்பாடு.... என நீள்கிறது.  கண்ணனை வணங்கும் கண்ணதாசனுக்கு இப்படி சலனமுறுகிற குணம் இருந்தாலும் கவி பாடுவதில் எந்தக் குறையும் எக்காலத்திலும் வரவில்லை. மது, மாது, போதை, அரசியல் பழகினாலும் கூட அவருக்கு வருமானம் ஈட்டித்தர தமிழ் தயங்கவில்லை. அ

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை சேர்த்து சாதித்த பிராந்திய கட்சிகள்!

படம்
  தேர்தல் பத்திரங்களில் நிதி சேர்த்த அரசியல் கட்சிகள்! 2020-2021ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற தொகையை ஐந்து பிராந்திய கட்சிகள் வெளியிட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக முன்னிலை வகிக்கிறது. இந்த கட்சி, 2020-21  காலகட்டத்தில் மட்டும் 218.5  கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர தொகை பற்றி  ஜனநாயக சீர்த்திருத்த கூட்டமைப்பு ஏடிஆர் செய்தி வெளியிட்டுள்ளது.  திமுக -218.5 கோடி தெலுங்குதேச கட்சி - 54.8 கோடி அதிமுக -42.4 கோடி ஐக்கிய ஜனதாதளம் - 24.3 கோடி தெலங்கான ராஷ்டிர சமிதி -22.3 கோடி   மொத்தமாக இந்த கட்சிகள் பெற்ற தொகை 434.3  கோடி. இது கட்சிகளின் மொத்த வருமானத்தில் 83 சதவீதமாகும். தன்னார்வ நிதியாக கட்சிகள் பெற்றுள்ள தொகை 250.60 கோடி. வருமானத்தில் இதன் அளவு 47.34 சதவீதம். பிற வழியில் பெற்ற நிதி சதவீதம் 23.9 சதவீதம்.  மொத்தமுள்ள 31 கட்சிகளில் 5 கட்சிகள் மட்டும்தான் நிதி பற்றிய தகவலை வெளியே கூறியுள்ளன. 17 பிராந்தியக் கட்சிகள் தமது நிதியை செலவிடாமல் வைத்திருப்பதையும் கூறியுள்ளன.  டைம்ஸ் ஆப் இந்தியா  

சிங்காரச்சென்னைத் திட்டம் 2.0 - சந்தோஷம் கிடைக்குமா?

படம்
                சிங்காரச்சென்னை வேண்டுமா ? சந்தோஷச் சென்னை வேண்டுமா ? சென்னை மாநகரம் தனது 382 ஆம் ஆண்டு பிறந்த தினத்தைத் கொண்டாடுகிறது . இதை இங்கு வாழும் பலரும் நம்புவதற்கு கடினமாகவே இருக்கிறது . நூற்றாண்டுகளுக்கு முரர் கிழக்கிந்திய கம்பெனி , மெட்ராஸ் எனு்ம் இந்த துண்டு நிலப்பகுதியை வணிகத்திற்காக வாங்கியது . அதில்தான் இன்று கலை , கலாசாரம் , வணிகம் என அனைத்தும் வளர்ந்துள்ளது . நவீன காலத்தில் சென்னையை மேம்படுத்த பலரும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள் . பெரும்பாலும் திமுக அரசு என்று உறுதியாக சொல்லலாம் . இந்த கட்சிக்கு சென்னை என்பது தொப்புள்கொடி உறவு என்று கூறலாம் . முன்னர் ராபின்சன் பூங்கா இப்போது அறிஞர் அண்ணா பூங்காவில்தான் சி . என் . அண்ணாதுரை திமுகவைத் தொடங்கினார் . கட்சி பெயரை குடந்தை நீலமேகம் அறிவித்தார் . 1949 ஆம்ஆண்டு செப்டம்பர் 17 அன்று கட்சி தொடங்கப்பட்டது . சென்னையை அழகுபடுத்தும் திட்டமாக சிங்காரச்சென்னை என்பது 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது தொடங்கப்பட்டது . இப்போது ஆட்சித்தலைவராக உள்ள ஸ்டாலின் தனது பழைய திட்டத்திற்கு

தலைவராக அதிகரிக்கும் வரவேற்பு! - ஸ்டாலினோடு துணை நிற்கலாமா?

படம்
                      அதிமுகவும் , திமுகவும் ஜெயலலிதா , 2016 ஆம் ஆண்டு மகத்தான தேர்தல் வெற்றியைப் பெற்றார் . இதன்மூலம் 32 ஆண்டுகளாக இருந்த சாதனையை தகர்த்தார் . ஒரே கட்சி இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெறுவது பற்றியதுதான் அது . எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கி தோல்வியை சந்திக்காத முதல்வராக இருந்தார் . அவர் 1987 இல் இறந்துபோனார் . அதற்குப்பிறகுதான் 1989 இல் திமுக வெற்றி பெறமுடிந்தது . 2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது . ஆனாலும் கூட தமிழக முதல் அமைச்சராக வாய்ப்பளிக்கும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் திமுகவின் தலைவரான ஸ்டாலினுக்கு அக்னி பரிட்சைதான் . கட்சிக்காக கலைஞர் காலத்திலிருந்து களப்பணி ஆற்றிவரும் அவருக்கு முதல்வர் பதவி கிடைப்பது என்பது உழைப்பிற்கான பரிசாக அமையக்கூடும் . தற்போதைய முதல்வரான பழனிசாமியைப் பொறுத்தவரை முதல்வர் பதவி என்பது அதிர்ஷ்டவசமாக கிடைத்தது . ஆனால் கட்சி எம்எல்ஏக்களை கட்டிக்காப்பாற்றியதில் அவரது சாமர்த்தியம் உள்ளது . தவிக்கும் மதவாத சக்திகள் பாஜக கட்சி உள்ளே நுழைய முடியாமல் தவிக்கும் மாநிலங்களில் தமிழ்நா

மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை திமுக, காங்கிரஸ் தடுத்துக்கொண்டே இருக்கிறது! - எல்.முருகன், பாஜக

படம்
  எல்.முருகன்- TOI எல். முருகன் பாஜக தலைவர் உங்கள் கட்சி சமூக விரோதமான பல்வேறு விஷயங்களை செய்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளதே? எங்கள் கட்சியில் உறுப்பினராக சேர ஒருவர் மிஸ்டுகால் கொடுத்தாலே போதும். இதன் காரணமாக உறுப்பினர் தவறான காரியங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்புண்டு. நாங்கள் குற்றத்தொடர்பு கொண்டவர்களோடு பணியாற்றவில்லை.  கடந்த மக்களவைத் தேர்தலில் மோடிக்கு எதிரான அலை இருந்ததே? இன்று அந்த விஷயம் மாறியுள்ளது. அதனால்தான் மீனவர்கள், நடிகர்கள் எங்கள் கட்சியில் இணைந்து வருகிறார்கள். வெறுப்பு பிரசாரத்தை திமுகவும், காங்கிரசும் திட்டமிட்டு செய்துவருகிறார்கள். இனிமேல் இந்த வெறுப்பு பிரசாரம் மக்களிடையே செல்லாது.  எத்தனை தொகுதிகளில் வெல்வோம் என நினைக்கிறீர்கள்? இருபது தொகுதிகளை வெல்வோம். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக முத்திரை பதிக்கும். வெல்வதைப் பொறுத்து ஆட்சியில் பங்கேற்பதை மேலிடம் முடிவு செய்யும்.  நடக்கவிருக்கும் தமிழக தேர்தலை தேசப்பற்று கொண்டவர்களுக்கும் தேச விரோதிகளுக்குமான போர் என்று  கூறியது எதற்காக? இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்களை கொல்ல துணைநின்றது திமுகதான். அப்போது ஆட்ச