தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை சேர்த்து சாதித்த பிராந்திய கட்சிகள்!

 








தேர்தல் பத்திரங்களில் நிதி சேர்த்த அரசியல் கட்சிகள்!

2020-2021ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற தொகையை ஐந்து பிராந்திய கட்சிகள் வெளியிட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக முன்னிலை வகிக்கிறது. இந்த கட்சி, 2020-21  காலகட்டத்தில் மட்டும் 218.5  கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர தொகை பற்றி  ஜனநாயக சீர்த்திருத்த கூட்டமைப்பு ஏடிஆர் செய்தி வெளியிட்டுள்ளது. 

திமுக -218.5 கோடி

தெலுங்குதேச கட்சி - 54.8 கோடி

அதிமுக -42.4 கோடி

ஐக்கிய ஜனதாதளம் - 24.3 கோடி

தெலங்கான ராஷ்டிர சமிதி -22.3 கோடி 

மொத்தமாக இந்த கட்சிகள் பெற்ற தொகை 434.3  கோடி. இது கட்சிகளின் மொத்த வருமானத்தில் 83 சதவீதமாகும். தன்னார்வ நிதியாக கட்சிகள் பெற்றுள்ள தொகை 250.60 கோடி. வருமானத்தில் இதன் அளவு 47.34 சதவீதம். பிற வழியில் பெற்ற நிதி சதவீதம் 23.9 சதவீதம். 

மொத்தமுள்ள 31 கட்சிகளில் 5 கட்சிகள் மட்டும்தான் நிதி பற்றிய தகவலை வெளியே கூறியுள்ளன. 17 பிராந்தியக் கட்சிகள் தமது நிதியை செலவிடாமல் வைத்திருப்பதையும் கூறியுள்ளன. 

டைம்ஸ் ஆப் இந்தியா  


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்