ஜவகர்லால் நேருவுக்கு வரலாற்று ரீதியான மரியாதையை நாங்கள் வழங்கியுள்ளோம்! - நிரிபேந்திர மிஸ்ரா

 







நிரிபேந்திர மிஸ்ரா



நிரிபேந்திர மிஸ்ரா

தலைவர், நேரு நினைவு அருங்காட்சியகம்


புதிய அருங்காட்சியகம்  நாட்டின் முதல் பிரதமரான நேருவிற்கு நியாயம் செய்துள்ளதா?


நாங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள பிரதமர்களைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை சரியாக  சேகரிக்க முயன்றிருக்கிறோம். சீனாவுடன் நடந்த 1962 போர் பற்றிய தகவல்களும் இதில் அடங்கும். இந்த போரின்போது இந்தியா சரியான முறையில் தயார்படுத்தப்படவில்லை. நான் கூறும் கூற்றை உறுதிப்படுத்தும் கடிதங்கள் கிடைத்துள்ளன. 1975ஆம் ஆண்டு காலத்தில் இந்தியா ஓரளவுக்கு போருக்கு தயாராக இருந்தது. ஆனால் இதை விமர்சிக்க ஒன்றுமில்லை. ஏனெனில் நாம் நாடு இந்த முறையில் தான் பரிணாம வளர்ச்சி பெற்றது. 

ஜவகர்லால் நேருவின் இடம் பற்றி கவனம் எங்களுக்கு எப்போதுமே உண்டு. அவர் பல்வேறு அடிப்படையான நிறுவனங்களை உருவாக்கினார். ஜனநாயக முறையை அவரே உருவாக்க உழைத்தார். பிரதான் மந்திரி சங்கராலாயாவில் முதல் பிரதமர் நேரு திட்டக்குழுவை உருவாக்கியது, நாடாளுமன்றத்தை கட்டியது என பல்வேறு விஷயங்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு துணை கண்காட்சி மையங்கள் உள்ளன. இவற்றைப் பார்க்கும்போது ஜனநாயகத்தை உருவாக்க உழைத்த நேருவுக்கு நியாயம் செய்ய நாங்கள் உழைத்திருப்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். 

பிற பிரதமர்களுக்கும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் உண்டு என கூறியிருக்கிறீர்கள்?

நிச்சயமாக. நாங்கள் குல்ஸாரிலால் நந்தா, சௌத்ரி சரண் சிங் ஆகியோரையும் கூட அருங்காட்சியகத்தில் சேர்த்துள்ளோம். பிரதமராக இருந்த அனைவரையும், அவர்களது  செயல்பாடுகளையும் கூட விளக்கியுள்ளோம். 

பிரதமர், அவரது இளமைக்கால வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என டெம்பிளேட் போல நாங்கள் பிரதமர்களை தொகுத்துள்ளோம்.  இதன் கூடவே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல், காந்தி ஆகியோரைப் பற்றியும் தகவல்களை சேகரித்து தொகுத்துள்ளோம். ஏனெனில் இந்தியாவிற்கு இவர்களின் பங்களிப்பான பரிசு ஜனநாயக ஆட்சிதான்.  ராஜாஜி, கோபிநாத் போர்டோலாய், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் இங்கு இடமுண்டு. 

அருங்காட்சியகத்தில் ஒர்க் இன் ப்ரோக்ரஸ் என்று கூறியிருந்தீர்கள்? அதற்கு என்ன அர்த்தம்?

நாங்கள் அருங்காட்சியகத்தில் தீம்களை சில மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற முடிவு செய்திருக்கிறோம். இதன்படி விளையாட்டு, பெண்கள் என தீம்களை மாற்றுவோம். மோடி பற்றிய தகவல்கள் இல்லை என்று மக்கள் கேட்டனர். அவரது ஆட்சியில் எந்த பகுதியை எடுப்பது என இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்தபிறகு அதனை செயல்படுத்துவோம். 

அருங்காட்சியகத்தில் நூலகம் ஒன்றை உருவாக்கி, பிரதமர்களைப் பற்றிய நூல்களை அதில் இடம்பெறச்செய்யும் திட்டமுள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள் இங்கு படித்து விவாதிக்க இடத்தை உருவாக்க உள்ளோம். 


தலைவர்களை சரியான முறையில் குறிப்பிடவில்லை என்று கருத்துகள் உருவாகியுள்ளதே?

ஜவகர்லால் நேருவை நாம் பொதுவாக பண்டிட் நேரு என்றுதான் அழைக்கிறோம். இதற்கென நாங்கள் தனி கமிட்டி வைத்து பேசித்தான் இதை உருவாக்கினோம்.  சரண்சிங் பெயரை சௌத்ரி என்று பெயர் வைக்கலாமா அல்லது இது விவசாயிகளின் உணர்வுகளை புண்படுத்துமா என்று யோசித்துதான் அவரது பெயரை வைத்தோம். அலுவலக முறையில் ஸ்ரீ ஜவகர்லால் நேரு என்றுதான் கூறுகிறார்கள். எனவே நாங்கள் இதை பின்பற்றினோம். 

தி டைம்ஸ் ஆப் இந்தியா

ஸ்வாதி மாத்தூர்












கருத்துகள்

பிரபலமான இடுகைகள்