10 நிமிட டெலிவரி பயன் தருகிறதா?
பத்தொன்பது நிமிட டெலிவரியைப் பார்த்திருப்பீர்கள். பீட்ஸா கம்பெனிகள்தான் வேகமான டெலிவரி என்ற விஷயத்தை உருவாக்கியது. இந்தவகையில் அவர்கள் 45 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்திற்கு மாறினார்கள். இப்போது பிளிங்இட், பிக் பேஸ்கட், ஸ்விக்கி, ஜோமோடோ, டன்சோ என பலரும் இருபது நிமிட டெலிவரி சிஸ்டத்தில் வேலை செய்கிறார்கள். இதில் கூட டெலிவரி செய்யும் ஆட்கள் நகரங்களில் வேகமாக செல்வது,சிக்னல் விதிகளை மீறுவது என செல்கிறார்கள். இதோடு பைக் டாக்சிகளும் ஓடுவதில் பலருக்கும் குழப்பமாகிறது.
இத்தனையும் தாண்டி ஸெப்டோ என்ற நிறுவனம் மார்க்கெட்டில் உள்ளே வரும்போதே பத்து நிமிட டெலிவரி என்று கூறி உள்ளே நுழைந்தது. இதனை தொடங்கியவர்கள் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் படிப்பை முடிக்காத இரு இளைஞர்கள். ஒன்பது மாத நிறுவனமான இதன் இயக்குநர் ஆதித் பலிச்சா. இவரது நிறுவனம் இப்போதைக்கு 11 நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. எதிர்காலத்தில் 24 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.
200 மில்லியன் நிதி திரட்டிய நிறுவனத்தின் மதிப்பு 900 மில்லியன் ஆகும்.
ஆதித் பலிச்சா (வலதுபுறம்) |
வேகமாக பொருட்களை டெலிவரி செய்த ஆர்டர் செய்பவர்களின் அருகில் கடைகள் இருக்கவேண்டுமே? இப்படி உள்ள கிடங்குகளைத் தான் டார்க் ஸ்டோர் என்று கூறுகிறார்கள். இந்த வகையில் குரோஃபர் நிறுவனம் நாடு முழுக்க 300 டார்க் ஸ்டோர்களை வைத்திருக்கிறது. நான்கு மணிநேரத்திற்கு ஒன்று என தொடங்கி வருகிறது.
ஸ்விக்கி ஒரு உணவுப்பொருளை வழங்கும் சேவை நிறுவனம்தான். இப்போது மெல்ல இன்ஸ்டாமார்ட் என்ற சேவையைத் தொடங்கியுள்ளது. இதற்காக 700 மில்லியனை முதலீடாக செய்துள்ளது. 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய இந்த நிறுவனம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை விற்கிறது. இதேபோல இந்த நிறுவனத்திற்கு போட்டியாக உள்ளது டாடாவின் பிக் பேஸ்கட்.
2
அதிகம் விற்கும் பொருட்கள் என்னென்ன?
பால், உருளைக்கிழங்கு, பிரெட், ஐஸ்க்ரீம், சிப்ஸ், குழந்தைகளுக்கான டயாப்பர், முட்டை , பெண்களுக்கான சானிடரி நாப்கின்கள்
பெரும்பாலும் கடுமையான பணி நெருக்கடியில் உள்ள ஐடி சேவை ஆட்களுக்கு கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க நேரமிருக்காது. அவர்களே முக்கியமான பொருட்களை மட்டுமே க்விக் காமர்ஸ் கம்பெனி மூலம் வாங்குகிறார்கள். இவை பெரும்பாலும் இரவு நேரங்களில் வாங்கப்படுபவைதான். ஏனெனில் அப்போது நிறைய கடைகள் திறந்திருக்காது. இருக்கும் வாய்ப்பு ஆன்லைன் சேவை நிறுவனங்கள் தான்.
1.8 கி.மீ. தூரத்திற்குள் உள்ள கிடங்கில் பொருட்களை சேகரித்து வேகமாக பேக்கிங் செய்கின்றனர். இவர்கள் 8 அல்லது 12 நிமிடங்களில் டெலிவரி செய்வார்கள் என்கிறார். ஸெப்டோவைப் பொறுத்தவரை பொருளுக்கான கட்டணம் மட்டும்தான் வாங்குகிறார்கள். கொடுக்கும் சேவை இலவசம். ஆனால் பிற நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்க தொடங்கி விட்டார்கள். இதுபற்றிய கட்டுரை ஒன்றை இந்து தமிழ் திசையில் சதீஸ் கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக