அறிவியலாளர்களுக்குக் கூட பாலுறவு பற்றி பேச கூச்சமும், தயக்கமும் இருக்கிறது! - பிரான்ஸ் டி வால், மானுடவியலாளர்

 













ஃபிரான்ஸ் டி வால் (Frans de waal)

பேராசிரியர், எமோரி பல்கலைக்கழகம், ஜார்ஜியா.

பொதுவாக மனிதக்குரங்குகளைப் பற்றி நாம் கேள்விப்படும் செய்திகள் பாலுறவு மற்றும் சண்டை சம்பந்தமாகவே இருக்கும். அதன் வாழ்க்கையில் வேறு விஷயங்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதுபற்றிய ஆராய்ச்சியில் தான் பேராசிரியர் ஃபிரான்ஸ் டி வால் ஈடுபட்டிருக்கிறார். போனபோ, சிம்பன்சி ஆகியவற்றுக்கும் மனிதர்களுக்கும்  நிறைய வேறுபாடுகள் இருக்கிறதென கூறுகிறார். பிறர் மீதான கரிசனம், கூட்டு முயற்சி ஆகிய இயல்புகளைக் கொண்டதாக மனித குரங்கு உள்ளது என்று கூறுகிறார். பாலின அடையாளங்கள் பற்றி டிஃப்ரன்ட் வாட் ஏப்ஸ் கேன் டீச் அஸ் அபவுட் ஜென்டர் என்ற நூலை எழுதியிருக்கிறார். அவரிடம் பேசினோம். 



கலாசாரம் சார்ந்து பாலின அடையாளங்கள் மாறுவதாக எப்படி கூறுகிறீர்கள். டோனா என்று சிம்பன்சியை உங்கள் கருத்துக்கு ஆதரவாக கூறுகிறீர்கள். இதைப்பற்றி விளக்குங்கள். 

டோனா, ஒரு பெண் சிம்பன்சி. ஆனால் ஆணைப் போன்ற உடல் அமைப்பு. பெரும்பாலான நேரங்களில் ஆண்களோடு சுற்றிக்கொண்டிருப்பாள். பாலின அடிப்படையில் பெண் என்றாலும் பெரும்பாலான நேரங்களில் ஆண்போலவே செயல்பட்டுக்கொண்டிருப்பது அவளது இயல்பு. பாலின அடிப்படையில் ஆண் சிம்பன்சிகள் பெரிதாக இருக்கும். ஆனால் தகுதியில் பெரிதாக இருக்க அவை முயல்வதில்லை. அரசியல் சார்ந்து ஈடுபாடு கொண்ட ஆண்களை குழுவில் தலைவராக தேர்ந்தெடுப்பதில்லை. ஆண் பெண் போலவும், பெண் ஆண் போலவும் செயல்படுவது உண்டு. பொதுவாக அறிவியல் பார்வையில் நாம் இவற்றை தங்கள் பாலினத்தை வெளிப்படுத்துகின்றன என்று பார்ப்பதில்லை. சிம்பன்சிகளுக்கு இடையே நாம் நினைப்பதை விட பாலினம் சார்ந்த தன்மை நீர்த்த தன்மையுள்ளதாகவே உள்ளது. 

நீங்கள் கூறுவதைப் பார்த்தால், உயிரியல் ரீதியாக பாலினம் என்பது குறிப்பிட்ட குணங்களின் மீது செல்வாக்கு செலுத்துகிறது அப்படித்தானே?

பெண்களை விட ஆண்கள் உடல்ரீதியாக வன்முறையை செயலில் காண்பிப்பவை. இந்த குணம் மனிதக்குரங்கு தொடங்கி மனிதர்களின் ஆண் மைய சமூகம் வரை அப்படியே தொடர்கிறது. இந்த காரணத்திற்காக நாம் அதை ஏற்கவேண்டும் என்பதல்ல. வேறுவகையான பழக்கவழங்கங்களைக் கூட ஒருவர் சாத்தியப்படுத்த முடியுமா என யோசிக்கலாம். 

மனிதர்களை பாலின ரீதியாக புரிந்துகொள்ள மனிதக்குரங்குகள் உதவுகிறதா?

பாலின ரீதியாக நாம் நிறைய கருத்துகளைக் கொண்டிருப்போம். அவற்றை தவறு என உணர்த்துவதுஇதுபோன்ற அறிவியல் ஆய்வுகள்தான். பெண்களை நாம் பொதுவாக போட்டியிட முடியாத, திறன் குறைந்தவர்கள் என நினைத்து வருகிறோம். ஆனால், கோழிகளைப் பாருங்கள். அவை தான் குஞ்சுகளுக்குவழிகாட்டி வளர்க்கின்றன.

 பறவைகளிலும் பாலூட்டிகளிலும் பெண்கள் தான் தலைவர்களாக இருக்கின்றன. சிம்பன்சிகளும் போனபோவும் தங்கள் குட்டிகளை அந்தளவு கவனம் எடுத்து வளர்க்காது. அதாவது, ஆண்கள். ஆனால் பெற்றோரில்லாத சிம்பன்சியோ, போனபோவோ உணவு தேடி ஆதரவு தேடி நின்றால் ஆண் சிம்பன்சிகளும் போனபோவும் அவற்றை தத்தெடுத்து நின்று வளர்க்கும். இது பல்லாண்டுகளுக்கு தொடரும். ஆண்களால் குழந்தைகளை வளர்க்க முடியாது என பொதுக்கருத்து உண்டு. அதற்காக மேற்சொன்ன உதாரணத்தைச் சொன்னேன். 

விலங்குகளைப் பற்றி பேசும்போது கூட நாம் பாலுறவு பற்றிபேச கூச்சப்படுகிறோமே ?

பொதுவாகவே பாலுறவு பற்றி பேசுவதில் நமக்கு கூச்சம் இருக்கிறது. வன்முறை, ஆதிக்கம் பற்றி பேசுவதில் எந்த தயக்கமும் இல்லை. அறிவியலாளர்கள் கூட பாலுறவு, பாலுறவு தூண்டுதல்கள் பற்றி பேசாமல் விலகிப்போய்விடுகிறார்கள். நான் ஒருமுறை போனபோவின் கிளிட்டோரிஸ் பற்றி அறிவியலாளர்களிடம் பேசியபோது அவர்கள் பதற்றமடைந்ததைப் பார்த்தேன். இப்படிப்பட்ட சூழல் நிலவுவது துரதிர்ஷ்டவசமானது. 

அறிவியலாளர்கள் எதற்கு விக்டோரியா கால ஆட்கள் போல நடந்துகொள்கிறார்கள்?

உண்மைதான். பெண்களுக்கான பாலினத்தையும், மகிழ்ச்சியையும் பல்லாண்டுகளாக நாம் மறுத்து வந்திருக்கிறோம். எனவே தான் போனபோவின் பழக்க வழக்கங்களை அறிவியலாளர்கள் பதற்றத்துடன் பார்க்கிறார்கள். மானுடவியலில் வேட்டை, போர் ஆகியவற்றில் ஆண்களின் பங்கு பற்றி மட்டுமே ஆராய நினைக்கிறார்கள். போனபோ இனத்தில் ஆண், பெண், பெண், பெண் என பெருமளவில் பாலுறவு கொள்ளும்  இயல்புடையது. 

போனபோ, சிம்பன்சி என இரு இனத்திற்கும் பாலுறவில் உள்ள வேறுபாடு என்ன?

போனபோ பைசெக்ஸூவல் தன்மை கொண்டது. சிம்பன்சி, ஹோமோசெக்ஸூவல் தன்மை கொண்டது. இதனை அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவே தயங்குகிறார்கள். இயற்கையில் இந்த இயல்பில் ஏதும் பிழையில்லை. மனிதர்கள் அவர்கள் சமூகத்தில் இப்படி மாற்றம் உள்ள மனிதர்கள் நீ ஏன் ஆண் போல நடந்துகொள்வதில்லை என கேள்வி கேட்கிறார்கள். இதுபோன்ற தன்மைகள் மாறவேண்டும். 

நியூ சயின்டிஸ்ட் இதழ் 









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்