வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வேதிப்பொருள்! - கன்னபீடியால் எனும் சிபிடி

 






கன்னபீடியால் - மேல்தட்டு வீரர்களுக்கான ரெகவரி மருந்து!

2018ஆம் ஆண்டு ஆன்டி டோபிங் ஏஜன்சி, கன்னபீடியாலை தனது தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் இருந்து நீக்கியது. இதனை மேல்தட்டு வர்க்க பணக்கார வீரர்கள் வலிநிவாரணியாக பயன்படுத்தி வந்தனர். 

இதனை சுருக்கமாக சிபிடி என்று அழைப்பார்கள். சிபிடி - கன்னபீடியால். உடலில் சற்று வேகமாக வேலை செய்து உடல் சோர்வை குறைப்பதோடு வலி, வீக்கம் நீக்கி நல்ல தூக்கத்தை உடலுக்கு கொடுக்கிறது. மனப்பதற்றம் நீக்குகிறது. 

கஞ்சா தாவரத்திலிருந்து நூற்றுக்கும் அதிகமான வேதிப்பொருட்களை தயாரித்து வருகின்றனர். அதில் சிபிடியும் ஒன்று. மனிதர்களுக்கு இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை. எலிகளை வைத்து செய்த சோதனையில் மேற்சொன்ன நிறைய விஷயங்கள் தெரிய வந்துள்ளன. சிபிடி துறை 2025ஆம் ஆண்டில் ஒரு பில்லியன்  பவுண்டுகளாக உயரும் என எதிர்பார்க்கின்றனர். 

நீங்கள் அதிகளவு சிபிடியை உடலில் எடுத்துக்கொள்ளும்போது மூளையில் உள்ள நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் சமநிலை அடைகின்றன. இதன் விளைவாக பதற்றம் தொடர்பான பிரச்னைகள் தீர்கின்றன என்று ஊட்டச்சத்து வல்லுநர் ஜெஸ் ஹில்லார்ட் கூறுகிறார்.

மத்திய நரம்பியல் அமைப்பை சிபிடி அமைதிபடுத்துகிறது. எண்டோகன்னபினாய்ட் ரிசெப்டர் அமைப்பை கட்டுப்படுத்துவதால் வலி, வீக்கம் ஆகிய பிரச்னைகள் குறைகின்றன என பல்வேறு ஆய்வுகள் தகவல்கூறுகின்றன. 

இதன் பக்கவிளைவுகளாக குமட்டல், எரிச்சல் ஆகிய அறிகுறிகள் ஏற்படுகின்றன என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக மருத்து இதழ் தகவல் கூறுகிறது. சிபிடியை பாதுகாப்பானது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. சிபிடி தூய்மையான பொருளாக சந்தையில் கிடைப்பதில்லை. இதன் விலையும் கூட அதிகம்தான். எனவே சிபிடியை உடல் பயிற்சி செய்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அளவு குறைவாக இருக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். 

மென்ஸ் ஃபிட்னெஸ்  

 image -open access government

 

கருத்துகள்