கோவிட் இறப்புகள் இந்தியாவில் அதிகமா?

 












இந்தியாவில் 47 லட்சம் மக்கள் கொரானாவால் பலியானார்கள் என்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறது. இது எந்த நாடுகளையும் விட அதிகம் என்பதால், பதறிப்போன இந்தியா, இதனை அப்படியெல்லாம் கிடையாது என ஒரே பேச்சாக முடிவாக மறுத்துள்ளது. உண்மை என்ன என்று டைம்ஆஃப் இந்தியா செய்தியை வெளியிட்டுள்ளது. 

2020 -2021 காலகட்டத்தில் இந்தியா 47.4 லட்ச மக்களை இழந்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தனது ஆவணங்களின்படி கூறியுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் ரஷ்யா உள்ளது. இந்த நாடு, 10.7 லட்ச மக்களை நோய்க்கு பலி கொடுத்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் இந்தோனேஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் வருகின்றன. 

லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா குறிப்பாக உக்ரைன், போலந்து, ரோமானியா ஆகிய நாடுகளில் மக்களி இறப்பு சதவீதம் இந்தியாவை விட அதிகம். இந்தியாவின் மக்கள்தொகையோடு ஒப்பிட்டால், உலக சுகாதார நிறுவனம் கூறும் இறப்பு எண்ணிக்கை குறைவு. 

இதனை எப்படி கணக்கிடுகிறார்கள்? நூறு லட்சத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட நாடுகளை பட்டியலிட்டுக்கொள்ளவேண்டும். 

அடுத்து அதில் லட்சத்திற்கு எத்தனை பேர் கொரானாவால் இறந்தார்கள் என்பதை கணக்கிட வேண்டும். இந்த வகையில் இந்தியாவில் லட்சத்திற்கு 171 பேர்தான் இறந்துள்ளார்கள் என கணக்கு வருகிறது. பெரு நாட்டில் லட்சத்திற்கு 437 பேர் மரணித்துள்ளனர். ரஷ்யா 367, பிரேசில் 160 என கணக்கு செல்கிறது. ஆக, கங்கையில் பிணங்கள் மிதக்குமளவு மக்கள் செத்தாலும் கூட நாம் அறியவேண்டியது தென் ஆப்பிரிக்கா, இந்தோனேஷியாவை விட குறைவான மக்களையே அரசு சாகவிட்டுள்ளது என்பதைத்தான். 

அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் கொரானாவை எதிர்க்கும் செயல்திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளன.இங்கு சமூக நலத்திட்டங்களுக்கென சிறப்பான அரசு திட்டங்கள் உண்டு. 

கல்வியில் பெண்களோடு போட்டியிட்டு வெல்லமுடியாத மாணவர்களைப் போலவே கொரானவிலும் கடும்தோல்வியை பெற்று சுடுகாட்டிற்கு சென்றவர்கள் ஆண்மக்களே. காரணம் என்னவாக இருக்கும்? அதிகம் வெளியிடங்களுக்கு அவர்களே அலைந்து திரிந்து பொருள் தேடுகிறார்கள் என்பதுதான். இதனால் 40-80 வயது கொண்ட ஆண்மக்கள் பலரும் நோய்க்கு எளிதாக பலியாகிவிட்டனர். பெண்கள் கொரானவால் அதிகம் மரணத்தை தழுவவில்லை. 

25-39 வயது பிரிவில் இறந்த ஆண்களின் எண்ணிக்கை 41,654, பெண்களின் எண்ணிக்கை 37,600

டைம்ஸ் ஆஃப் இந்தியா









கருத்துகள்