டிஜிட்டல் அடிமைத்தனம் - அறிகுறிகளை அறிவது எப்படி?

 
டிஜிட்டல் அடிமை

கொரோனா காலம், நமக்கு டிஜிட்டல் பொருட்கள் மீது பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பார்க்கலாம். இன்று நீங்கள் குறிப்பிட்ட நூல்களை கையில் எடுத்துச்செல்லவேண்டியதில்லை. அதற்கு பதிலாக போனை கையில் எடுத்துச்சென்றால்போதும். மடிக்கணினி கூட வேண்டியதில்லை. போனில் உள்ள இணைய வசதியை முடுக்கி, தேவையான நூல்களை நீங்கள் பெற்று படிக்கலாம். அதனை பல்வேறு தளங்களில் சோதித்து கூட பார்க்கலாம். புதிய நூல்களைக் கூட பணம் கொடுத்து தரவிறக்கிக்கொள்ளலாம். சுமை ஏதும் நம் தோளில் ஏறாது. புதிதாக கற்றுக்கொள்ள இணைய வழயில் ஏராளமான வழிகள் உள்ளன. 

குறிப்பிட்ட ஒருவருக்காக காத்திருக்கிறோம் என்றால் அதற்காக வருத்தப்படவேண்டியதில்லை. நூல்களை ஃப்ரீதமிழ் இபுக்ஸ் அல்லது இண்டர்நெட் ஆர்ச்சீவ் சென்று வாசிக்கலாம். இணையத்தில் வேறு ஏதாவது விஷயங்களைப் பார்க்கலாம். குறிப்பாக, யூட்யூபில் பிலிப் பிலிப், கிச்சடி மிஸ்டர் தமிழன் போன்ற சேனல்களைப் பார்க்கலாம். நேரத்தை வீண் என்று ஸ்மார்ட்போன் உள்ளவர் எப்போது சொல்ல மாட்டார். 


எதிர்மறை பக்கம் என்பது சமூக வலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் கணக்குகளில் அடிக்கடி மூழ்குவது, இதில் பதிவுகளைப் போடவே நிறைய விஷயங்களை செய்வது, இதில் வரும் கமெண்டுகளைப் பொறுத்து மனநிலையை உருவாக்கிக்கொள்வது  என்று கூறலாம். பலருக்கும் இனி உளவியலாளர்களின் ஆலோசனை தேவைப்படும். அந்தளவு சமூக வலைத்தளம், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டா ஆகியவற்றில் வரும் செய்திகள் மனிதர்களை பாதிக்கத் தொடங்கியுள்ளன. 

அண்மையில் விவோ சிஎம்ஆர் என்ற ஆராய்ச்சி அமைப்பு டிஜிட்டல் அடிக்ஷன் பற்றி ஆய்வொன்றை செய்தது. இதில், 2 ஆயிரம் பேர்கள் பங்கேற்றனர். பெரும்பாலும் 18-45 வயதினர் அதிகம். டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, மும்பை, புனே, அகமதாபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஆய்வு நடைபெற்றது. 

இதில், காலையில் எழுந்தவுடன் போனைப் பார்க்கிறவர்களின் எண்ணிக்கை 84 சதவீதம். ஒருமணிநேரத்திற்கு 5 முறையாவது போனை எடுத்துப் பார்க்கிறவர்கள் 46 சதவீதம். போன் இல்லாமல் இருப்பது தங்கள் மனச்சோர்வு கொள்ள வைக்கிறது என்றே நிறையப் பேர் சொல்லியிருக்கிறார்கள். அதேசமயம், அதனை பயன்படுத்துவது மனம், உடல்நலனைப் பாதிக்கிறது என்பதையும் பலர் உணர்ந்திருக்கிறார்கள். 

 அடிமைத்தனத்தின் அறிகுறிகள் என்னென்ன?

நள்ளிரவில் ஸ்மார்ட்போனை, மடிக்கணினியை எடுத்து பார்ப்பது

உறக்கம், வேலை, உணவு, உறவு என அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு கணினி, ஸ்மார்ட்போன் திரையையே பார்த்துக்கொண்டிருப்பது

இப்படி கணினி அல்லது ஸ்மார்ட்போனை பார்க்க அனுமதி மறுக்கப்படும்போது அதனை தாங்க முடியாமல் கோபம், மனச்சோர்வு கொள்வது

கல்வி, வேலையில் டிஜிட்டல் அடிமைத்தனம் பாதிப்புகளை ஏற்படுத்துவது

எட்டு மணிநேரத்திற்கும் அதிகமாக நீலநிறத் திரைகளைப் பார்ப்பது. அதிலும் கண்களை பாதிக்காமல் இருக்க நைட்மோடு வைத்து நிகழ்ச்சிகளைத் தொடர்வது...

ஆன்லைனில் உயிர்த்துடிப்போடும், ஆஃப்லைனில் அய்யோராமா மோடிலும் இருப்பது

இந்தியா டுடே மே 2022

சோனல் அச்சார்ஜி


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்