சுனாமி பாதிப்பால் உருவான நன்செய் அமைப்பின் சூழல் பணி!

 









2004ஆம் ஆண்டு. டிசம்பர் 26 அன்று நாகப்பட்டினம் கடற்புரத்தில் சுனாமி பேரழி ஏற்பட்டது. அதை இன்றுவரை தமிழக மக்கள் யாரும் மறக்கவில்லை. அந்தளவு இயற்கை தன் ஆற்றலை மனிதர்களின் கட்டுமானங்கள் மீது பதிவு செய்தது. 

அப்போது ஜே செந்தில்குமாருக்கு வயது 18. வரலாறு படிப்பில் இளங்கலைப் பட்டதாரியாக இருந்தார். சுனாமி பாதிப்பை ஈடுகட்டும் செயல்களில் ஈடுபட்ட மனிதர்களோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார். 

பதினெட்டு ஆண்டுகள் ஆனாலும் பாதிப்பை இன்னும் செந்தில்குமார் மறக்கவில்லை. சூழலியல் பாதிப்பை சரிசெய்ய 2019ஆம் ஆண்டு நன்செய் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு தேனி பகுதியில் பசுமையான சூழல் பரப்பை உருவாக்க உழைத்து வருகிறது. 

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இயற்கை பேரழிவுதான் எனக்கு சூழல் பற்றிய கவனத்தை ஏற்படுத்தியது. எனவே, நான் காலநிலை மாற்றம், வெள்ளம் இப்படி பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களைத் தேடினேன் என்றார் செந்தில். 

நன்செய் அமைப்பின் முக்கியமான பணி, ஆணிகளைப் பிடுங்குவதுதான். அதாவது, மரத்தில் சுடர்மணி ஜட்டி, ஜான்சன் சூப்பர் மார்க்கெட், ஜியோ தள்ளுபடி ஆஃபர் என ஒட்டிவிட்டு செல்கிறார்கள் அல்லவா? இவற்றைப் பிடுங்கி எறியவே மக்களை தன்னார்வலர்களை இணைத்து தனி திருவிழாவை செந்தில் நடத்துகிறார்.  இந்த வகையில் 140 நிகழ்ச்சிகளை செந்தில் நடத்தி 300 கிலோவுக்கும் அதிகமாக குப்பைகளை அகற்றியிருக்கிறார். 

செந்திலும் அவரது நண்பர்கள் 13 பேரும் இணைந்து மரங்களில் உள்ள ஆணிகளை, விளம்பரங்களை அகற்ற காலையிலேயே கிளம்பி விடுகிறார்கள்.  நாங்கள் மக்களுக்கு இப்படி ஆணிகளை மரங்களில் அடிப்பதால் அவை பலவீனமாக இறந்துவிடும் என பிரசாரம் செய்து ஆதரவைப் பெறுகிறோம் என்கிறார். 2010இல் உத்தம்பாளையத்தில் தனது ஆணியை பிடுங்கும் பணியைத் தொடங்கினார் செந்தில். இன்று இவரது முயற்சியால், பதினாறு கிராமத்து பஞ்சாயத்துகளில் மரங்களில் ஆணிகளை அடிக்கும் செயலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

2019ஆம் ஆண்டு தொடங்கி நன்செய் அமைப்பு, 50 ஆயிரம் பனை விதைகளை நட்டுள்ளனர். இதனை கண்மாய்களில் நடவு செய்துள்ளனர். இவர்கள் நட்டதில் 70 சதவீத பனைமரக்கன்றுகள் முளைவிட்டு வளர்ந்துள்ளன. இந்த திட்டத்தில் உழைத்தவர்கள் பெரும்பாலும் மாணவர்கள்தான்.  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியுள்ளது நன்செய் அமைப்பு. 

உத்தம்பாளையம் அரசு மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் மூலிகைத் தோட்டத்தை அமைத்துக்கொடுத்துள்ளார் செந்தில். சூழல் தொடர்பான கிராஃபிட்டி ஓவியங்களையும் பதினாறு அரசுப்பள்ளி சுவர்களில் நன்செய் அமைப்பு வரைந்துகொடுத்துள்ளது. 












தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஜெயலட்சுமி ராமானுஜம்

------------------

ஜிஃபர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்