மரபான நெற்பயிர் ரகங்களை சேகரிக்கும் விவசாயி!

 







கரிமங்கலம் தாலூக்காவைச் சேர்ந்த ஜே பாளையத்தைச் சேர்ந்தவர் அமர்நாத்.  தனது நிலத்தில், நாட்டுரக பயிர்களை பயிர்செய்து வருகிறார். சிறுவயதில் தனது தாத்தா பயிரிட்ட கத்தரி செடிகளை பார்வையிட்ட நினைவு அவருக்கு இப்போதும் இருக்கிறது. 

விவசாயத்தை பட்டப்படிப்பில் எடுத்து படித்தவருக்கு, வேலை எளிதாக கிடைக்கவில்லை. சரி இருக்கும் நிலத்தில் பயிர்களை பயிரிடலாம் என்று நினைத்து உழைத்த உழைப்பும் கைகொடுக்கவில்லை. எனவே, நாட்டு ரக பயிர்களைத் தேடி தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களுக்கு சென்றார். 

நான் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று விவசாயம் செய்பவர்களிடம் பேசினேன். அதில் நாட்டு ரக பயிர்கள் பலவும் அழிந்துவிட்டதை அறிந்தேன். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. அந்த நிலையை மாற்ற விரும்பினேன். நினைத்ததோடு அல்லாமல் அதற்காக உழைக்க விரும்பினார். அப்படித்தான் ஐந்து ஆண்டுகளில் 26 நாட்டு ரகங்களை சேகரித்தார். 

பழங்குடிகள் வாழும் ஊர்களான மோதுர், வத்தல்மலை, சித்தேரி, பெத்தமுகிலாலம் சென்று நாட்டு நெற்பயிர் ரகங்களை சேகரித்திருக்கிறார். இவை அதிக பராமரிப்பு கோராதவை. எளிதாக பூச்சிகளையும், நோய்களையும் சமாளிக்க முடியும் திறன் கொண்டவை. 

நாட்டு ரக நெற்பயிரை நீங்கள் பயிரிட்டால் சந்தையில் கிடைக்கும் அரசி ரகங்களை விட 20 சதவீதம் குறைவாகத்தான் விளைச்சல் கிடைக்கும். ஆனால் உங்களுக்கு உரம், பூச்சிக்கொல்லி ஆகிய செலவுகள் மிச்சமாகும். இது விவசாயிகளுக்கு லாபம்தான் என்றார் அமர்நாத். 

அமர்நாத் தர்மபுரியில் நடைபெறும் மரபுச்சந்தை நிகழ்ச்சியில் ஆறுமாதங்களாக பங்கேற்று வருகிறார். இங்கு மரபான நாட்டு ரக அரிசியை விற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர், எம் உமாசங்கர். அமர்நாத், இயற்கை விவசாய முறைகளை நான்கு ஆண்டுகளாக இலவசமாக பிற விவசாயிகளுக்கு கற்றுத் தந்து வருகிறார். மரபு நெற்பயிர் ரகங்களோடு சிறுதானியங்களையும், பழங்களையும் காக்கும் முயற்சிகளை அமர்நாத் செய்துவருகிறார். 

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

ஜேவின் செல்வின் ஹென்றி




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்