இடுகைகள்

விலையுயர்ந்த நாய் இனங்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காஸ்ட்லி காவலர்கள்!

படம்
விலையுயர்ந்த நாய்கள்! LÖWCHEN நீள முடிகொண்ட சிறியரக நாய் இனம். 14-16 ஆம் நூற்றாண்டில் சிறிய சிங்கம் புகழப்பட்டு ஓவியங்களிலும் இடம்பெற்ற நாய் இது. விலை 10 ஆயிரம் டாலர்கள். SAMOYED சைபீரியாவில் வாழும் சமோயெதிக் மக்களின் பெயரிலிருந்து பெயரை இரவல் பெற்ற நாய் இனம். ஸ்லெட் வண்டிகளை இழுக்கவும் பாதுகாவலனாக பயன்பட்ட இந்நாயின் விலை 8 ஆயிரம் – 10 ஆயிரம் டாலர்கள். TIBETAN MASTIFF கரடியின் கம்பீரத்தில் மிரட்டும் செம்மறிகளின் காவலன் திபெத்தியன் மஸ்டிப் இன நாய். சீனா, நேபாளம், திபெத், இமாச்சல பிரதேசத்தில் பட்டி ஆடுகளுக்கு காவலன் இவன்தான். விலை 7 ஆயிரம் டாலர்கள். SALUKI எகிப்து மனிதர்களுக்கு தோழன் சலுகி. நீண்டகால்களும் ஒடுங்கிய வயிறும் இதன் அக்மார்க் அடையாளம். விலை 2500 டாலர்கள். PERUVIAN INCA ORCHID உடலில் முடி இல்லாமல் யானையின் தோற்றத்தை நினைவுபடுத்தும் பெரு நாட்டு நாய் இனம். விலை. 3 ஆயிரம் டாலர்கள்.