இடுகைகள்

குக்கூ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலக வாழ்க்கையை செயலூக்கத்துடன் வாழக் கற்றுத்தரும் நூல்!

படம்
  தன் மீட்சி ஜெயமோகன் தன்னறம் நூல்வெளி pinterest இந்த நூல் இளைஞர்களின் சமகால பிரச்னைகளையும், அதற்கு ஜெயமோகன் என்ன தீர்வுகளைச் சொல்லுகிறார் என்பதையும் கொண்டுள்ளது.  இலக்கிய வாசிப்பு தொழில் வாழ்க்கையை பாதிக்குமா? ஒன்றுக்காக இன்னொன்றை தியாகம் செய்யவேண்டுமா என்றால் அதற்கான பதில்களை தெளிவாக தனது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பதில்களை தேடி எடுத்து சொல்கிறார்.  இது பதில் கேட்பவர்களுக்கும், தொகுப்பாக நூலை வாசிப்பவர்களுக்கும் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.  நூலின் இறுதியில் ஆசான் என்று தன்னை அழைப்பவர்கள் பற்றியும், குக்கூ அமைப்பின் மூலம் தங்களது தொழில் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு தங்களுக்கு மனநிறைவு தரும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இதனை வாசிக்கும் யாருக்கும் தடுமாறாமல் முடிவெடுப்பதற்கான திறன் கிடைக்கும் என நம்பலாம்.  ஜெயமோகனின் வலைத்தளத்தில் இளைஞர்கள் வாசிப்பு பற்றியும், சொந்த வாழ்க்கையில் உள்ள தேக்க நிலை பற்றியும் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். கேள்விகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் கூடுதலாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கூற விரும்புவது என்று பார்த்தால், ஒரே

சூழலைக் காக்கும் பணியில் நவீன கலைஞர்கள்!

படம்
முத்துவின் வானம் -ஷில்பா கிருஷ்ணன்  ஐஐடி பாம்பேயைச் சேர்ந்தவர் பங்கஜ் ஷேக்சரியா. இவர் பேராசிரியராகவும் சூழல் சார்ந்த செயல்பாட்டாளராகவும் இருக்கிறார். இவர்  வெயிட்டிங் பார் டர்டில்ஸ் என்ற குழந்தைகள் நூலைப் படித்தார். அதில் சாம்ராட் என்ற சிறுவன், எழுதிய பல்வேறு ஆமைகளைப் பார்த்த கதையை வாசித்தார். இந்த நூலை கரடி டேல்ஸ் என்ற பெயர் கொண்ட பதிப்பகம் சென்னையில் வெளியிட்டது.  இந்த நூலைப் படிக்கும் சிறுவர்கள் கடலில் உள்ள பல்வேறு வகை ஆமைகள் மற்றும் நண்டுகளை அறிய முடியும். அந்தமானிலுள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்காக போராடி வருகிறார் பங்கஜ். அங்குள்ள ஜாரவா மக்களுக்காக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறார். அரசுடன் போராடி நீதிமன்றத்தில் போராடி பல்வேறு ஆணைகளைப் பெற்ற கதைகளை லாஸ்ட் வேவ் என்ற பெயரில் கதையாக எழுதினார். “நீதிமன்றத்தில் பல்வேறு உத்தரவுகளை பெற்று அதனை செயல்படுத்தும் நேரம் வந்தது. அப்போதுதான் 2014 ஆம் ஆண்டில் சுனாமி வந்தது அனைத்து விஷயங்களையும் மாற்றியது’’ என்றார் பங்கஜ் ஷேக்சரியா.  முத்துவின் வானம் என்ற கதையை குக்கூ தன்னார்வ அமைப்பின் தும்பி என்ற பதிப்பகம் வழியாக வெளியாகியுள்ளது. ஜவ்வா

இடது

படம்
                        இடது சமூக அரசியல் பண்பாட்டு காலாண்டிதழ் ஆசிரியர் ஓடை.பொ.துரையரசன் மார்க்ஸ் புதிய உலகின் திறவுகோல் பேராசிரியர் ஹிரென் முகர்ஜி தமிழில் : நா. தர்மராஜன் உலகத்தில் கடைசி மனிதன் இருக்கின்றவரை, அவனுடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரை அவர்களுடைய பெயர் நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிற தகுதியுடைய பெரியோர்கள் சிலரே. அந்த சிலரில் கார்ல் மார்க்ஸ் தலைசிறந்தவர். அவர் பிறந்தநாள் (1818 மே 5) உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. ‘’உலகத்தில் முதலாளிகளும் தொழிலாளிகளும் இருக்கின்றவரை நமக்கு முன்னாலிருக்கின்ற புத்தகத்தைப் போல தொழிலாளர்களுக்கு அதே அளவு முக்கியத்துவத்தைக் கொண்ட வேறு புத்தகம் இதுவரை வெளிவரவில்லை’’  வாழ்நாள் முழுவதும் மார்க்சினுடைய நண்பராக சகாவாக இருந்த ஏங்கெல்ஸ் ‘மூலதனத்தின்’ முதல் தொகுதியின்(1867) விமர்சனத்தை இப்படித்தொடங்கினார். இந்த வார்த்தைகள் முதன்முறையாக எழுதப்பட்டபோது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு இன்றும்கூட உண்மையாக இருக்கின்றன. கார்ல் மார்க்சும் அவருடைய சகாவான ஏங்கெல்சும் ஒன்றிணைந்தும் தனியா