இடுகைகள்

சுகாஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனைவி கருவுற்றதற்காக ஆணுறை நிறுவனத்தின் மீது ஒரு கோடி இழப்பீடு கேட்டு வழக்குத் தொடரும் கணவன்!

படம்
         ஜானக அய்தே கானக சுகாஸ், சங்கீர்த்தனா விபின், முரளிசர்மா, வெண்ணிலா கிஷோர் சிறிய பட்ஜெட் படம். கதை, அழுத்தமான திரைக்கதையை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார்கள். படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவருமே சிறப்பாக பங்களித்துள்ளனர். அமைப்பு ரீதியாகவே மேல், கீழ், பணக்காரன், ஏழை வர்க்க வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டுவிட்டோம். அதுதான் சிக்கலாக மாறி வறுமையிலுள்ள, மத்தியதர வர்க்க ஆட்களை வேட்டையாடுகிறது என படம் பேசியிருக்கிறது. படத்திற்கு பெரிய பலம், சுகாஸின் ஆத்மார்த்தமான நடிப்பும், அவரின் மனைவியாக நடித்துள்ள சங்கீர்த்தனாவின் சூழலுக்கு பொருத்தமான அழுத்தமான உள்ளடங்கிய பாத்திரமும்தான். சுகாஸ், மேஜிக் வாஷ் என்ற வாஷிங்மெஷின் கம்பெனியில் விற்பனை, பழுது பார்ப்பது ஆகிய வேலைகளை செய்யச் சேருகிறார். வார இறுதியில் பாருக்கு சென்று குடிக்கும்போது, அங்கு வெண்ணிலா கிஷோர் அறிமுகமாகிறார். கிஷோர் வக்கீல். சுகாஸ், வாஷிங்மெஷின் விற்பவர். இருவரும் தங்களது வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள், வாழ்க்கைச் செலவுகள்,பிள்ளைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக்கொடுப்பது, மனைவியுடனான உறவு என பல விஷயங்களையும் பகி...

நம்பிக்கை அளிக்கும் நடிகர்கள்- தமிழ், தெலுங்கு, இந்தி- ஓடிடி முதல் சினிமா வரை .....2020

படம்
                        நம்பிக்கை அளிக்கும் நடிகர்கள் காளிதாஸ் பாவகதைகளில் சுதாவின் பகுதியில் நடித்தவர் , இவர் நடித்த முதல் படமாக ஒருபக்க கதையும் இப்போது வெளியாகியுள்ளது . புத்தம் புது காலை என்ற அமேசானின் படத்தில் கூட நடித்திருக்கிறார் . சிறுவனாக நடித்தபோது தேசிய விருது பெற்றவர் காளிதாஸ் . வாணி போஜன்    ஓடிடியில் வரும் பல்வேறு படங்களுக்கு இவரைத்தான் புக் செய்கிறார்கள் . இவரும் தனக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ இல்லையோ ஓகே என பதில் சொல்லி நடித்துக் கொடுத்துவிடுகிறார் . அப்படித்தான் லாக்கப் , டிரிபிள்ஸ் படங்கள் வந்தன . சினிமாவாக ஓ மை கடவுளேவில் கொடுத்த வாய்ப்பில் சிறப்பாகவே நடித்திருந்தார் . தெலுங்கில் தருண் பாஸ்கரோடு ஒரு படத்தில் நடித்தார் . சித்து ஜோனலகட்டா   இப்போது நடித்த இரண்டு ஓடிடி படங்களும் இவரே எழுதி திரைக்கதை எழுதி நடித்தவைதான் . கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா , மா விந்த கதா வினுமா ஆகியவற்றில் இளைஞர்களை குறிவைத்து எழுதிய வசனங்கள் , காட்சிகள் அனைத்தும் பிரமாத வெற...