இடுகைகள்

குளோபல் வாய்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சானிடரி பேடுக்கு வரி - தான்சானியாவின் புதுமை!

படம்
கடந்த ஜூன் 13 அன்று தான்சானியா, நிதி அமைச்சகம் பெண்கள் பயன்படுத்தும் சானிடரி பேடுக்கு புதிதாக வரி விதித்துள்ளது. கடந்த ஆண்டு சானிடரி பேடுக்கு வரி கிடையாது என்று அறிவித்த அமைச்சர் பிலிப்பியோ பாங்கோ, திடீரென தடம் மாறியுள்ளார். நான் முன்பு வரி இல்லை என்று சானிடரி பேடுக்கு அறிவித்தது உண்மைதான். ஆனால் அதன் விளைவாக அதன் விலைகள் குறையும் என்று நினைத்தேன். எதிர்பார்த்த விளைவுகள் நடைபெறவில்லை எனவேதான் இந்த முடிவு என மனம் திறந்திருக்கிறார். வணிகம் என்பது அனைத்து நாடுகளிலும் ஒன்றுபோலத்தானே. அமைச்சர் வரியைக் குறைத்தவுடன் குஷியான உற்பத்தியாளர்கள், லாபம் சம்பாதிக்க முயற்சித்தார்களே ஒழிய மக்களுக்கு ஒரு ரூபாய் கூட குறைக்கவில்லை. எனவே தற்போது அமைச்சர் அதற்கு மாற்றாக கார்ப்பரேட் வரியை 30 லிருந்து 25 ஆக குறைத்துள்ளார். இதன்விளைவாக, உள்நாட்டிலேயே சானிடரி பேடுகளை குறைவான விலையில் தயாரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என அமைச்சர் நம்புகிறார். அமைச்சரின் ஓராண்டு வரி விலக்கு, உற்பத்தியாளர்களுக்கு போதுமானது அல்ல என்று வர்த்தகத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கூறினாலும் அதனால் எந்த விளைவும் ஏற்படாது என ப

ஜப்பான் மொழியைக் கற்கலாமா வேண்டாமா?

படம்
அண்மையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ட்விட்டரில் கொளுத்திப்போட்ட குண்டு இன்னும் வெடித்துக்கொண்டே இருக்கிறது. பிகோ ஐயர் என்ற ஜப்பான் வாழ் எழுத்தாளர், ஒரு நூலை எழுதியுள்ளார். அதுகுறித்த விமர்சனத்தில் ஜப்பான் மொழியை இன்னும் அவர் கற்கவில்லை. அது தேவையா? என்ற கேளவியை என்.டி எழுப்பியது. உடனே ட்விட்டரில் நியூயார்க் டைம்ஸை அட்மிட் செய்து இன்னா செய்தாரை வெச்சு செய்தனர். பிகோ ஐயரின் மனைவி ஜப்பானியர் என்பதால், அவர் மனைவி பல்வேறு விஷயங்களைப் பார்த்துக்கொள்கிறார். அதனால் ஐயர் ஜப்பான் மொழியைக் கற்கவில்லை என ட்விட்டரில் கேள்வி கேட்டு அவர்களாகவே பதில் கூறிய வினோதமும் நடைபெற்றது. ஜப்பானிய கலாசாரம் குறித்த பார்வையை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக பிகோ ஐயர் தன் நூலை எழுதியுள்ளார். நூலைப்பற்றி பேசாமல் ஒருவர் 25 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்தும் அந்நூலைப் பற்றி பேசவில்லை என்று கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள். அப்படிப் பார்த்தால் இந்தியாவில் ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ஒடிய மொழி தெரியாதவர். அவர் ஆட்சியில்தான் மாநில பேரிடர் ஆணையம் அமைக்கப்பட்டு இன்று பானி புயலை மிக நேர்த்தியாக ச