ஜப்பான் மொழியைக் கற்கலாமா வேண்டாமா?
அண்மையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ட்விட்டரில் கொளுத்திப்போட்ட குண்டு இன்னும் வெடித்துக்கொண்டே இருக்கிறது. பிகோ ஐயர் என்ற ஜப்பான் வாழ் எழுத்தாளர், ஒரு நூலை எழுதியுள்ளார். அதுகுறித்த விமர்சனத்தில் ஜப்பான் மொழியை இன்னும் அவர் கற்கவில்லை. அது தேவையா? என்ற கேளவியை என்.டி எழுப்பியது.
உடனே ட்விட்டரில் நியூயார்க் டைம்ஸை அட்மிட் செய்து இன்னா செய்தாரை வெச்சு செய்தனர். பிகோ ஐயரின் மனைவி ஜப்பானியர் என்பதால், அவர் மனைவி பல்வேறு விஷயங்களைப் பார்த்துக்கொள்கிறார். அதனால் ஐயர் ஜப்பான் மொழியைக் கற்கவில்லை என ட்விட்டரில் கேள்வி கேட்டு அவர்களாகவே பதில் கூறிய வினோதமும் நடைபெற்றது.
ஜப்பானிய கலாசாரம் குறித்த பார்வையை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக பிகோ ஐயர் தன் நூலை எழுதியுள்ளார். நூலைப்பற்றி பேசாமல் ஒருவர் 25 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்தும் அந்நூலைப் பற்றி பேசவில்லை என்று கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள். அப்படிப் பார்த்தால் இந்தியாவில் ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ஒடிய மொழி தெரியாதவர். அவர் ஆட்சியில்தான் மாநில பேரிடர் ஆணையம் அமைக்கப்பட்டு இன்று பானி புயலை மிக நேர்த்தியாக சமாளித்து உயிரிழப்புகளை குறைத்துள்ளார்.
இது திறமைதானே! மொழி தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் நாம் வாழும் நாட்டை, நகரை, பகுதியை நேசிப்பதுதான் முக்கியம்.
நன்றி: குளோபல் வாய்சஸ்