அரிய பாண்டா அல்பினோ!







அல்பினோ பாண்டா


பாண்டா பொதுவாக வெள்ளையும் கறுப்புமாக பார்த்திருப்பீர்கள். ஆனால் தற்போது காட்டில் கண்டறியப்பட்டுள்ள பாண்டா, முழுக்க வெண்ணிறமான தோலையும் சிவப்பு நிற கண்களையும் கொண்டுள்ளது.

இந்த காட்டு பாண்டா வின் அறிவியல் பெயர் அய்லுரோபோடா மெலனோலூகா. இவ்வகை கரடி கண்டறியப்படுவது விலங்கியலில் இதுவே முதல் முறை.

படத்தில் இருக்கும் கரடியை மதிப்பிட்டால், இரண்டு வயது இருக்கும் கரடி இது என்கிறார் பீகிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லீ செங்.

அகச்சிவப்பு கதிர் கேமராவைக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தின் மூலம் கரடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மூலம் படம் எடுக்கும் கேமரா இது. வோலங் தேசிய இயற்கை காடுகளிலிருந்து இந்த கரடி கண்டறியப்பட்டுள்ளது. ஏப்ரல் இருபது அன்று எடுக்கப்பட்ட கரடியின் புகைப்பட்டத்தை 25 அன்று வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் அதுகுறித்த விவரங்களை ஊடகங்களில் கூறினர்.

அல்பினா பாண்டாவுக்கு இருக்கும் நிறம் குறைபாடு ஆகும். இதன் விளைவாக இக்கரடிக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. கறுப்பு வெள்ளை என்றால் கூட ஏதோவொரு இருளான இடத்தில் ஒளிந்து உயிர் பிழைக்கலாம். ஆனால் அல்பினா பாண்டாவுக்கு அதுபோன்ற வாய்ப்பும் குறைவாகவே உள்ளது.
ஆனால் இக்கரடி நன்கு வலிமையாக உள்ளது. பாதங்களை எடுத்து வைப்பதிலும் தடுமாற்றமில்லை என்று புன்னகையுடன் தகவல்களை சொல்கிறார் லீ.

நன்றி: லிவ் சயின்ஸ்