நீலி பழிக்குப்பழி வாங்கினானா? - கடவுள் மற்றும் சாத்தானின் கதை!
தி டேல்ஸ் ஆப் டிமோன்ஸ் அண்ட் காட்ஸ்
ஜப்பான் அனிமே
மேட் ஸ்னெய்ல்
224 அத்தியாயங்கள்
முந்தைய பிறவியில் மன்னர் ஒருவரால் கொல்லப்படும் நீலி, எப்படி மீண்டும் குளோரி சிட்டியில் பிறந்து எதிரிகளின் வாலை ஒட்ட நறுக்கி, தன்னைக் கொன்ற மன்னரை போட்டுத்தள்ளுகிறார் என்பதே இந்த மாங்கா காமிக்ஸின் கதை.
கதை இன்னும் முடியவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.
பதிமூன்று வயது சிறுவன் நீலி, வகுப்பறையில் தனது முந்தைய காலத்தை நினைவுகூர்கிறான். மெல்ல நிகழ்காலத்திற்கு வந்தால் ஆசிரியர் வருணபேத த்தைக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதாவது, இவர்களுக்கு இது இதுதான் வரும் என. கோபத்தில் கொந்தளிக்கும் நீலி, இரண்டு மாதங்களில் சில்வர் ரேங்க் வரை வந்துகாட்டுகிறேன் என சவால் விடுகிறான். முதலில் அனைவரும் சிரித்தாலும்,. அவனையொத்த பொருளாதார ரீதியாக தாழ்ந்த குடும்ப வாரிசுகள் ஐவர் அவனை தங்களது முன்னோடியாக பார்க்க நாயகன் உருவாகிறான் மொமண்ட்.
உண்மையில் நீலி யார் என்ற உண்மை 224 அத்தியாயங்களிலம் சொல்லப்படவில்லை என்பதுதான் ட்விஸ்ட். அவன் முன்னதாகவே பல்வேறு மந்திரங்கள் ஆயுதங்களைக் கற்றிருக்கிறான். எனவே மேல்சாதியான சேக்கர்டு குடும்பத்தை குறிவைத்து தாக்குகிறான். அவர்களும் முட்டாள்தனமாக சண்டை போட வர பொது இடத்தில் வைத்து உதைக்கும உதையில் ஊரே நீலியின் குடும்பத்தைப் பற்றி பேசத் தொடங்குகிறது. இதற்கிடையில் சில மூலிகைகள், புனித ஆட்டின் கொம்புகளை வெட்டி வரச்செல்லும்போது , ஸிஞ்சர் என்ற மேல்வர்க்க குடும்ப பெண்ணைச் சந்திக்கிறான். பயிற்சி முறையின் தவறால் தடுமாறும் அப்பெண்ணின் வலி தீர்க்க, காதல் பிறக்கிறது.
அப்பெண்ணுக்குத்தான் வருகிறது. நீலி, முன் ஜென்மத்தில் தன் காதலியான ஸி யுனைச் சந்தித்து முரண்டு செய்து காதலிக்க வைக்கிறான். முதலில் காலிப்பயல் என நீலியை நம்பும் ஸியுன், பின்னாளில் நீலி இன்ஸ்க்ரிப்ஷனை படித்து ஆசிரியர் வேஸ்ட் என இன்ஸ்டிடியூட்டில் நிரூபிக்க அவனைக் கவனிக்கத் தொடங்குகிறாள்.
நீலி திட்டமிட்டு காய் நகர்த்துவது எதற்கு? அவரின் லட்சியம் என்ன? என்பதை நீங்கள் 224 அத்தியாயங்கள் படித்தாலும் தெரியாது. இருந்தாலும் படித்து யூகித்து அறிய முயற்சியுங்கள்.
மாங்கா காமிக்ஸில் கதை சீரியஸாக போனாலும் அட்டை முழுக்க ஜாலியாக காமரசத்தை அள்ளி இறைக்கிறது. அதைப் பார்த்துக்கொண்டு நீலி தன் ஆன்ம சக்தியை வைத்து எதிரிகளை கதறவைப்பதை ரசித்து படிக்கலாம்.
காமிக்ஸின் ஒவ்வொரு பேனல்களுமே இரண்டு நிமிஷங்களேனும் கவனிக்க வைக்கிறது. அவ்வளவு டீட்டெய்ல்கள் உள்ளன.
- கோமாளிமேடை டீம்
நன்றி: ஓவியர் பாலமுருகன்