யானையை வேட்டையாடத் தடையில்லை!


African Elephant




ஆப்பிரிக்காவிலுள்ள போஸ்ட்வானாவில் யானைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. எனவே அரசு, யானைகளை வேட்டையாட வாங்க என தடையை நீக்கியுள்ளது.


 ஆப்பிரிக்காவின் சாவன்னா யானைகளைக் காக்கும் நாட்டில் இப்படியொரு நிலைமையா என சூழலியலாளர்கள் நொந்துபோயுள்ளனர். காரணம் மேற்சொன்ன அறிவிப்புதான்.

யானைகளை வேட்டையாடும் தடையை நீக்கியது, அரசியல் விளையாட்டு என பலரும் கருதுகின்றனர். போஸ்ட்வானா அதிபரான மோக்வீட்ஸி மைசிசி , கிராமத்தினரின் ஓட்டுக்களைப் பெற இதுபோல அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்கிறது அரசியல் வட்டாரம்.


தற்போது போஸ்ட்வானாவில் 130000 யானைகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. யானைகள் இரைக்காக வீடு, வயல், தோட்டம் புகுந்து தாக்குவதை இத்தடை நீக்கும் என சூழலியல்துறை கூறியுள்ளது. யானைகளை வேட்டையாடுவதற்காக வெளிநாட்டினர் ஆப்பிரிக்கா வருவது சுற்றுலா வருமானத்தையும் அதிகரிக்கும் என வேற லெவலில் யோசிக்கிறது அரசு.


ஆனால் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. சட்ட விரோதமாக யானைகளை சுட்டுக்கொல்வதும் அதிகரித்து வருகிறது. 2007 - 2014 வரையில் யானைகளின் எண்ணிக்கை 30 சதவீதம் சரிந்தது. யானைகளை கொல்வதற்கான தடை 2014 ஆம் ஆண்டு முதன்முதலாக அமலுக்கு வந்தது. தற்போது ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள யானைகளின் எண்ணிக்கை நாலு லட்சம் ஆகும்.


யானைகளை கொல்வதற்கான தடையை இயான் காமா என்ற முன்னாள் போஸ்ட்வானா அதிபர் கொண்டுவந்தார். இதன்விளைவாக யானைகளுக்கு பாதுகாப்பான தேசமாக போஸ்ட்வானா மாறியது. தற்போது யானைகளை வேட்டையாடுவதற்கு 45 ஆயிரம் டாலர்களை அரசு வசூலிக்கிறது. சில தன்னார்வ அமைப்புகள் யானைகளின் தந்தங்களை விற்கவும் அரசு அங்கீகாரத்தை சட்டப்பூர்வமாக கோருகின்றன.


நன்றி: ஆல் தட் இன்ட்ரஸ்டிங்