இனி உங்கள் ஏசி பேசும்! - எல்ஜியின் புதிய சிப் காரணம்





Image result for lg AI chip

எல்ஜி, ஸ்மார்ட் சாதனங்களை இயக்கும் மூளை போன்ற சிப் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதனை நியூட்ரல் சிப் என்று அழைக்கின்றனர்.


எல்ஜி நியூட்ரல் எஞ்சின் எனப்படும் இந்த சிப், குரல், டேட்டா ஆகியவற்றை பரிசீலனை செய்யும் திறன் பெற்றது. இந்த சேவை மேக கணினியத்தில் இணைக்காத போதும் செய்யமுடியும். மே 17 அன்று சியோலில் எல்ஜி, நியூட்ரல் எஞ்சின் என்பது மூளையின் நியூரான்களைப் போன்ற செயல்பாடுகளைக் கொண்டது என அறிவித்தது.

கடந்த சில ஆண்டுகளாக எல்ஜி தன் ஏஐ பொருட்களை திங்க் என்ற பிராண்டில் சந்தைப்படுத்தி வருகிறது. இணைய இணைப்பின்றி செயல்படும் வசதி, அதற்கான பாதுகாப்பு ஆகியவற்றை எல்ஜி மனதில் கொண்டு இதனைத் தயாரித்திருக்கலாம் என்கிறாலர் அட்னன் பரூக்கி. 

புதிய எல்ஜி ஏஐ சிப், எதிர்காலத்தில் அனைத்து எல்ஜி பொருட்களையும் கட்டுப்படுத்தும் விதமாக தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக இருக்கலாம். கருவி, இணையத்தில இணைக்கப்படாமலிருந்தாலும் செயல்படுவது இதன் ஸ்பெஷல். 


இதன் அர்த்தம் இனி உங்கள் வீட்டில் வைத்திருக்கும் ஏசி, வாஷிங்மெஷின், டிவி, ஸ்மார்ட் உதவியாளர் என அனைத்து பொருட்களுக்கும் கண், காது கிடைக்கப்போகிறது என்பதுதான். 


நன்றி: டெக் எக்ஸ்ப்ளோரர்