சிவப்புடை கொலைகாரன்!








அசுரகுலம்

துவான் குவோசெங்

துவான் குவோசெங், மத்திய சீனாவின் ஹூபெய் பகுதியில் 13 பெண்களைக் கொன்றார். துவானுக்கு ஒரே நோக்கம் காசுதான். கற்பழிப்புக்கு எல்லாம் நேரமில்லை. சில சமயங்களில் உசுப்பேற்றிய இளந்தாரிகளை முயற்சித்து பார்த்தார் என்றாலும் அது உடலின் அந்த நொடி தேவைதானே ஒழிய நோக்கம் கிடையாது.

1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தன் கொலைவரிசையை துவான் தொடங்கினார். தாக்குதல், கொள்ளை, கொலை என அ, ஆ, இ வரிசையில் மிகச்சரியாக பயணித்தார். கொன்றவர்கள் அனைவருமே இருபது வயதான பெண்கள்தான். முதலில் துவான் முயற்சி செய்தது, சாலையில் இரவு நேரத்தில் போனைப் பார்த்தபடி நடக்கும் லூசு பெண்களைத்தான். ஆனால் பிறகு அந்த முயற்சிகள் நினைத்த பலனைத் தரவில்லை என்பதை உணர்ந்தவர், வீடு புகுந்து ரிலாக்சாக கொள்ளையடிக்க தொடங்கினார்.

அவர் சந்தித்த முதல் பெண்ணை வெறிகொண்டு பாய்ந்து தாக்கியதில் அவரின் உடலில் 30 கத்திக்குத்துகள்.  அப்போது அந்த பெண் சிவப்பு டிரெஸ் அணிந்திருந்தார். அதற்காகவே துவானை, சிவப்புடை கொலைகாரன் என அழைத்தனர்.

கொலை, கொள்ளைகளுக்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கொலைக்கான காரணம், சிறுவயதிலிருந்த பாதுகாப்பற்ற குடும்பநிலையும், உடலின் பலவீனமும்தான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1973 ஆம் ஆண்டு பிறந்த துவான், 1999 - 2001 வரை ஊக்கமாக செயல்பட்டார். பதிமூன்று நபர்களை கொள்ளையடித்தார் கொன்றார். பதிமூன்று வயதிலேயே ஏழாண்டுகள் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் இருந்தார். போதாதா? வெளியே வந்தவர் வீரியவித்தாக செயல்பட்டு பெண்களை கதிகலங்க வைத்தார்.

ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: மர்டர்பீடியா, லிஸ்ட்வர்ஸ்