ஏமனுக்கு மானிய உதவிகளை நிறுத்தலாமா? - ஐ.நா யோசனை


The accusation is that supplies are stolen for people other than intended recipients or sold for cash.

ஏமன் நாட்டில் மக்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களை ஹூதி புரட்சியாளர்களுக்கு வழங்கினால் விரைவில் உணவுப்பொருட்களுக்கான மானியம் நிறுத்தப்படும் என ஐ.நா தலைவர் அறிவித்துள்ளார்.


ஏமனில் ஹூதி புரட்சியாளர்கள் அரசை எதிர்த்து கடுமையாக போரிட்டு வருகின்றனர். அவர்கள் கைப்பற்றிய நிலப்பகுதி சார்ந்த மக்களுக்கு உண்ண உணவில்லை. இதனை மனிதநேயமுறையில் பரிசீலித்த ஐ.நா சபை இவர்களுக்கு பதினைந்து மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உணவுப்பொருட்களை அனுப்பி வைத்தது.


தற்போது ஐ.நாவின் உணவு வழங்கும் திட்டத்தலைவர் டேவிட் பீஸ்லி, ஐ.நா வழங்கும் உணவுப்பொருட்களை மக்களுக்கு வழங்காமல் ஹூதி புரட்சியாளர்களுக்கு கொடுத்தால் நாங்கள் உணவுப்பொருட்களையும் மானியம் வழங்குவதையும் நிறுத்திவிடுவோம் என அச்சுறுத்தி உள்ளனர்.


இதற்கு பதிலளித்த ஹீதி புரட்சியாளர்கள் சார்பான வெளிநாட்டுத்துறை அமைச்சர் ஹூசைன் அல் எசி,  தவறுகள் சிலசமயங்களில் நடைபெறலாம். ஆனால் நாங்கள் மக்களுக்கு வழங்கும் உணவுப்பொருட்களை புரட்சியாளர்களுக்கு வழங்கவில்லை. மக்களை நாங்கள் நம்புகிறோம். எங்களுக்கு ஆதரவளிக்கும் அவர்கள்தான் எங்கள் பலமும் கூட என்றார்.

பனிரெண்டு மில்லியன் ஏமன் மக்களுக்கு உணவளிப்பதே எங்களது லட்சியம் எனகிறார் டேவிட். தற்போது ஏமன் நாட்டுக்கு 150 மில்லியன் டாலர்கள் கிடைக்கிறது. இதன்மூலம் நாங்கள் 10 முதல் 12 மில்லியன் மக்களுக்கு உணவளித்து வருகிறோம் என்கிறார் ஹூசைன் அல் எசி.

மானிய உதவிகளை சரியானபடி கண்காணிக்க எங்களிடம் அமைப்பில்லை என்பதுதான் சிக்கல். மானிய உதவிகளில் 10 சதவீதம் இம்முறையில் வீணாகிறது. நாங்கள் ஹீதிகளிடம் கேட்பது ஒன்றுதான். பசியால் தவிக்கும் மக்களுக்கு உதவிட அனுமதியுங்கள்  என்கிறார் டேவிட்.

நன்றி: சிஎன்என்