மனநலனிற்கான தெரபி தேவை!




Image result for robert hare


உளவியலாளர்களை முக்கியப்படுத்தும் நியூரோஇமேஜ்!


இந்தியாவிலும் பிற நாடுகளிலும் தன்னிலையில் இல்லாதவர்களை, மனநிலை பிறழ்ந்தவர்களை விடுதலை செய்துவிடுவார்கள். செய்த தவறை அவர்களால் உணராத சூழலில் அவர்களுக்கு தண்டனை அளித்தாலும் அதனால் பிரயோஜனமில்லை என்பதே இதற்கு காரணம்.


இதே சூழ்நிலை ராபர்ட் ஹரேவின் உதவியாளரும் மாணவருமான கீலுக்கு ஏற்பட்டது. சிகாகோவில் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதியின் மீது 1983 ஆம் ஆண்டு கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கு சுமத்தப்பட்டது. அவருக்கு நியூரோ இமேஜ் முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஐக்யூ அளவு 140 என முடிவு வந்தால் மனநிலை பிறழ்ந்தவர் என மரணதண்டனை கைவிடப்படும் வாய்ப்பு இருந்தது. இன்று இலினாய்சிலும் கூட மரணதண்டனை கைவிடப்பட்டு விட்டது. அச்சூழலில் ஒன்பது மாநிலங்கள் மரண தண்டனையை கைவிட்டிருந்தன.

இன்று டிஎன்ஏ டெஸ்ட் போலவே நியூரோஇமேஜ் டெக்னிக், எம்ஆர்ஐ டெஸ்ட் குற்றவாளிகளுக்கு எடுத்து சமர்ப்பிக்கிறார்கள் என்றார் கீல்.


இன்று மக்களுக்கு மூளை குறித்த ஸ்கேன் எடுப்பது சுவாரசியமான விளையாட்டு போலாகிவிட்டது. ஆனால் இதில் இயல்பான மூளை பற்றிய கவனத்தையும் கைவிட்டுவிடக்கூடாது என எச்சரிக்கிறார் ஹரே.

அதேசமயம் ராபர்ட் ஹரே கூட மனநிலை சோதனைகளுக்கான கைதிகளை பயன்படுத்துகிறார்கள் என குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். ஆனால் விஷயம் அதல்ல.

 அவர்களின் மூளைகளும் பிறரைப் போலவே வளர்ச்சி பெறுகின்றன. இதற்கு காரணம், மரபணுக்களாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால், நான் சந்தித்த கைதி ஒருவர் நீங்கள் உலகை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது சொன்ன பதிலை என்னால் மறக்க முடியாது. எலிகளின் உலகில் பூனையாக என்னை கருதுகிறேன் என்றார். இதனால் அவர்களுக்கு நல்லது கெட்டது, சமூகத்தின் விதிகள் என அனைத்துமே தெரியும். ஆனால் அவர்கள் அதை மீறி நடப்பார்கள். இதற்கு தேவை தண்டனைகள் அல்ல, தெரபிதான். அதனை எப்படி அளிப்பது என நாம் யோசிக்க வேண்டும். 



DSC-D0616_11



ஹரேவின் ஆய்வுகளைப் பற்றி மேலும் அறிய இந்த நூலை நீங்கள் வாசிக்கலாம். இதில் அவர் களப்பணியாற்றி சேகரித்த ஆட்கள் பற்றிதகவல்கள், கேட்ட கேள்விகள் என அனைத்தும் பதிவாக உள்ளது. 

ஆக்கம்: பொன்னையன் சேகர்

நன்றி: டிஸ்கவர் இதழ்







பிரபலமான இடுகைகள்