ஸ்டேப்ளர்ஸ் டேட்டா ரெடி!
பத்தொன்பதால் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டேப்ளர்ஸ் இன்று இல்லாத இடம் கிடையாது. அதிலேயே ஏராளமான நிறம், வகை, பெரியது, சின்னது என அத்தனை விஷயங்களும் இருக்கிறது.
முதல்முறையாக விற்பனைக்கு வந்த ஸ்டேப்ளரின் எடை 2.5 பவுண்ட்ஸ்.
விக்கி ஹவ் பக்கத்தில் கையில் குத்திய பின்னை எப்படி நீக்குவது என்று 3 ஸ்டெப்களில் வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் பயன்படுத்தும் ஸ்டேப்ளரின் அளவு 6 மி.மீ.
ஜனவரி 2011 முதல் மார்ச் 2018 வரை அறுவை சிகிச்சையில் தவறாக பயன்படுத்தப்பட்ட, பிரச்னை எழுந்து 366 உயிர்கள் பறிபோயுள்ளன. இதற்கு காரணம் ஸ்டேப்ளர்கள்தான்.
ஸ்விங்லைன் கம்பெனியின் 2018 ஆம் ஆண்டு வருமானம் 194 மில்லியன் டாலர்கள். இந்த கம்பெனியின் நிறுவனர்கள் 60 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான படத்தை நியூயார்க் அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினர்.
நன்றி: க்வார்ட்ஸ்