இடுகைகள்

அஸ்திரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூரியவம்சிகளை அழிக்க பாசுபாஸ்திரத்தை ஏவும் சிவன்! - வாயுபுத்திரர் வாக்கு- அமிஷ் திரிபாதி

படம்
  சிவா முத்தொகுதி வாயு புத்திரர் வாக்கு அமிஷ் திரிபாதி வெஸ்ட்லேண்ட் முதல் இரு பாகங்களில்... இதுவரை..... குணாக்களின் தலைவரான சிவன், நீலகண்டர் என அடையாளம் காணப்படுகிறார். அவரை அடையாளம் கண்ட சூரிய வம்சிகள் தங்களுக்கு ஏற்ப அவரை மூளைச்சலவை செய்கின்றனர். இதனால் சோமரஸம் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து சந்திரவம்சிகளால் உருவானது என நம்புகிறார். இதனால் போர் நேரிடுகிறது. இதில் சந்திரவம்சிகள் தோற்றுப்போகின்றனர் அயோத்யாவின் ஸ்வத்பீட மன்னர் திலீபர், தோற்றுப்போனாலும் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சூரியவம்சிகள் பக்கம் நீலகண்டர் இருப்பது அவரை நிலைகுலைய வைக்கிறது. உண்மையில் நீலகண்டர்  சூரியவம்சி மற்றும் சந்திரவம்சிகளுக்கு பொதுவான ஆளுமை, கடவுள். இதை நீலகண்டர் உணர வாசுதேவர்கள் உழைக்கிறார்கள். டெலிபதி மூலம் அவரிடம் தொடர்புகொண்டு மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறார்கள்.  சிவனுக்கு இயல்பிலேயே டெலிபதி திறன் உள்ளது. ஆனால் அதனை செயல்படுத்த சற்று உயர்ந்த இடத்திலுள்ள கோவில்களுக்கு செல்லவேண்டியுள்ளது. முதல்பாகத்தில் சிவன் நீலகண்டராக மாறுகிறார். தேவகிரி செல்கிறார். சூரியவம்சி மன்னரான