இடுகைகள்

பசுமை இல்ல வாயு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கரிம எரிபொருட்களால் அதிகரிக்கும் கார்பன் டை ஆக்சைடு அளவு!

படம்
  கார்பன் டை ஆக்சைடு வெளியீடு/ காலநிலை மாற்றம் கரிம எரிபொருட்களை எரிப்பதுதான் கார்பன் டை ஆக்சைடு உலகில் அதிகளவு பரவுவதற்கு காரணமாக உள்ளது. நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றை மின்சாரம் உற்பத்தி செய்ய ஆதாரமான பொருட்களாகப் பயன்படுத்துகின்றனர். வீடுகளில் சமைக்கவும், கதகதப்பு ஊட்டவும் கூட பயன்பாட்டில் உள்ளது. தொழில்துறை வளர்ச்சி தொடங்கிய காலம் முதற்கொண்டு, நிலக்கரி மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது. இன்று வரையும் இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், அதன் விலை ஒப்பீட்டளவில் பிற பொருட்களை விட குறைவு. மலிவு. இதனால்தான், சூழல் மாநாட்டில் கார்பன் இலக்குகளை தூரமாக தள்ளிவைத்துக்கொண்டே நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றனர். அடுத்து, பெட்ரோல், டீசல் பயன்பாடு உள்ளது. இவற்றை பெரும்பாலும் சரக்குப் போக்குவரத்திற்காக பயன்படுத்துகின்றனர். 2015ஆம் ஆண்டு, உலகில் வெளியான கார்பன் டை ஆக்சைடு அளவு 85.5 சதவீதம். இதற்கு, கரிம எரிபொருட்களே முக்கியமான காரணம். கச்சா எண்ணெய்யை அகழ்ந்தெடுத்து அதை தூய்மை செய்து பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய், தார் , பிளாஸ்டிக், கனிம எண்ணெய் என பல்வேறு வகையாக பிரித்து பயன்படுத்

காற்றில் உள்ள வேதிப்பொருட்கள்!

படம்
காற்றில் உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் என்ன இருக்கிறது என நினைப்போம். அதில் கார்பன் டை ஆக்சைடு எனும் முக்கியமான பசுமை இல்ல வாயு உள்ளது. இதன் காரணமாகத்தான் பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. நாம் ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறோம். கார்பன் டை ஆக்சைடை முழுக்க எதிர்மறையாகவே பார்க்கவேண்டுமென்பதில்லை. அதுவும் உயிரினங்களுக்கு உதவுகிற ஒன்றுதான். ஆனால் அதன் அளவு அபரிமிதமாக அதிகரிக்கும்போது பிரச்னைகள் தொடங்குகின்றன. வளிமண்டலத்திற்ள் ஒருமுறை கார்பன் டை ஆக்சைடு வந்துவிட்டால் முழுமையாக மறைந்துபோக நூறாண்டுகள் தேவை. காற்றில் நீர், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை சூழலை பாதிக்கும் தீவிரம் கொண்டவை. வெப்பமோ வெப்பம் வெப்பம் அதிகமாகிக்கொண்டே செல்லும் காலநிலையை எல்நினோ அறிகுறி என்கிறார்கள். இது வெப்பமான சூழ்நிலையைக் குறிக்கிறது. எரிமலை வெடிப்பு நடக்கும் சூழலை, குளிர்ச்சியான ஆண்டுகள் என குறிக்கிறார்கள். 2020ஆம் ஆண்டு உலகளவில் வெப்பநிலை 1.2 டிகிரி செல்

உருகும் ஆர்க்டிக் வெளியாகும் நச்சு!

படம்
ஆர்க்டிக் பகுதி, வெப்பமயமாதலால் உருகிவருவதை டிவியிலும் நாளிதழ்களிலும் பார்த்திருப்பீர்கள். இதன் விளைவாக, அணுக்கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றிலிருந்து நச்சுகள் வெளியாகி நீர்ப்பரப்பில் கலக்கத் தொடங்கியுள்ளன. 2100 ஆம் ஆண்டுக்குள் கரிம எரிபொருட்கள் விளைவாக ஆர்க்டிக் பகுதி பனிக்கட்டிகள் முழுவதும் கரையும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக, அனைத்து இயற்கை நிகழ்ச்சிகளும் மாறி நிகழும் வாய்ப்புள்ளது. மேலும் பசுமை இல்ல வாயுக்களின் அளவும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவது நம் கைகளில்தான் உள்ளது. உலகளாவிய ஆராய்ச்சிக்குழுக்கள் பனி உருகி வரும் வேகத்தை ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் வெளியாகும் கார்பன் அளவை கணித்து அதனைக் குறைக்க முடியும் என்கிறார் ஆராய்ச்சியாளர் வுட்ஸ் ஹோல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் சூ நடாலி கூறியுள்ளார். நன்றி: ஃப்யூச்சரிசம்

வெப்பமயமாதல் அதிகரிக்கும் கார்பன் வெளியீடு

படம்
Scroll.in பஞ்சம் கார்பன் வெளியீட்டை அதிகரிக்கிறதா? வெப்பமயமாதல் காரணமாக ஏரிகளிலும், அணைகளிலும் வற்றிவரும் நீராதாரம் கரிம எரிபொருட்களை பயன்படுத்த ஊக்குவித்து கார்பன் வெளியீட்டை அதிகரிப்பதாக ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2001-2015 காலகட்டங்களில் கலிஃபோர்னியா, இடாகோ, ஓரேகான், வாஷிங்டன் ஆகிய அமெரிக்க மாநிலங்களில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியில் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். ”நிலத்தடி நீர் குறையும் போது இயற்கை எரிவாயு அல்லது நிலக்கரி சார்ந்த மின்சார தயாரிப்புக்கு பல்வேறு நாடுகளும் முயற்சிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.” என்கிறார் ஆராய்ச்சியாளரான நோவா டிஃபன்பாக். அமெரிக்க மாநிலங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு(கொலராடோ, உடா, வாஷிங்டன், வியோமிங்), நைட்ரஜன் ஆக்ஸைடு(கலிஃபோர்னியா, கொலராடோ, ஒரேகான், உடா, வாஷிங்டன், வியோமிங்) வாயுக்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்களுக்கு நுரையீரல் நோய்கள், அமிலமழை, காற்று மாசு ஆகியவை ஏற்படுவது குறித்த ஆய்வறிக்கை அண்மையில் வெளியானது. நீராதாரங்களின் பற்றாக்குறை காரணமாக  ஏற்பட்ட கார்பன் வெளியீடு 10 கோடி டன்களாக அதிகரித்துள்ள