இடுகைகள்

பிரிக்லின்க் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழலுக்கு இசைந்த விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் தடுமாறும் லீகோ!

படம்
  லீகோ குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதை அறிவீர்கள். இந்த நிறுவனம் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான அடிப்படை ஆதாரம், கச்சா எண்ணெய்தான். ஆனால் சூழலியல் கட்டுப்பாடு, அதைப்பற்றிய அறிவு மக்களுக்கு அதிகரித்து வருவது நிறுவனத்திற்கு சங்கடமாகி வருகிறது.  எனவே லீகோ தனது உற்பத்தியை மாசுபாடு அதிகம் ஏற்படுத்தாத மறுசுழற்சி செய்யும் பொருட்களுக்கு மாற்றி வருகிறது. தற்போது அக்ரிலோனைட்ரில் பூட்டாடையின்  ஸ்டைரீன்  சுருக்கமாக ஏபிஎஸ் என்ற பொருளை பயன்படுத்தி வருகிறது. இதை மறுசுழற்சி செய்யலாம். உயிரியல் ரீதியாக மட்க கூடியது. ஆனால் அதற்கான காலம் அதிகம்.  தற்போது, லீகோ பிராண்டின் மதிப்பு ஏழு பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்த நிறுவனம் சூழலுக்கு உகந்த பொருளை கண்டுபிடித்து அதை உற்பத்திக்கு பயன்படுத்தினால் மட்டுமே வணிக வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லீகோ நிறுவனம், ஆர்பெட் எனும் பிளாஸ்டிக்கை பற்றி பெருமையுடன் கூறியது. இதை பயன்படுத்தி மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்கலாம் என்றது. ஆனால் இந்த வகை பிளாஸ்டிக்கும் கூட லீகோவிற்கு உத