இடுகைகள்

ஆசை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்களின் வாழ்வை வடிவமைக்கும் மூன்று உளவியல் அம்சங்கள்!

படம்
  ஃப்ராய்டின் மகள் செய்த ஆய்வுகளைப் பற்றி பேசுவோம். இவர் தந்தை ஃப்ராய்ட் செய்த ஆய்வுகளை மறுத்து வேறு கருத்துகளை முன்வைத்தார். அதைப்பற்றித்தான் பார்க்கப்போகிறோம். ஈடன் தோட்டத்தில் ஆதாம், ஏவாளுக்கு பாம்பு ஒன்று தடை செய்யப்பட்ட கனியை சாப்பிட ஆசை காட்டி, அவர்கள் சாப்பிட்ட கதையை படித்திருப்பீர்கள். கிறிஸ்துவ மத புனித நூலான பைபிளில் மேற்சொன்ன கதை இடம்பெற்றுள்ளது. இதை அடையாளம் காட்டுவது போலவே ஃப்ராய்ட் தனது உளவியலை மூன்று அம்சங்கள் கொண்டதாக வடிவமைத்தார். இதில் ஐடி, சூப்பர் ஈகோ, ஈகோ ஆகியவை உள்ளடங்கும்.  இதில் ஐடி என்பது பாம்பு. ஆசையைத் தூண்டிவிடுவது. உணவு, பாலியல் உணர்வு, உடை, வீடு என பல்வேறு விஷயங்கள் மீது ஆசைப்படத் தூண்டுவது என கொள்ளலாம். சூப்பர் ஈகோ என்பது நடத்தை கொள்கை, லட்சியம் என கொள்ளலாம். பெற்றோர்கள், சமூகம் சொல்லும் நன்னடத்தை விதிகள், வாழ்க்கை நெறிகள் ஆகியவற்றைக் கொண்டது. ஈகோ என்பது மேற்சொன்ன இரண்டு நிலைகளுக்கும் இடைபட்டு முடிவெடுத்து இயங்குவது. மனதில் ஆசைகள் காவிரியாக பொங்கினாலும் அதை அடக்கியபடி முடிவுகளை எடுக்கும் செயல்திறன் கொண்டது.  தந்தை ஃப்ராய்ட் கூறிய கருத்துகளை சற்று விரிவுபடு

ஆசைகளை மனதில் மறைத்து வைத்தால் ஏற்படும் ஆபத்தான நிலைமை!

படம்
  உளவியலில் தன்னுணர்வற்ற நிலை என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலை என்பது ஒருவரின் வாழ்பனுவத்தைக் கடந்த இயல்புடையது. கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று. தன்னுணர்வற்ற நிலையில் நினைவுகள், உணர்ச்சிகள், கருத்துகள் சேகரமாகின்றன. இதனால்தான் இந்த கருத்து மீது ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உளவியலாளர் சிக்மண்ட் உளவியலாளர் ஆர்வம் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  அன்றைய காலத்தில் தன்னுணர்வற்ற நிலை பற்றிய ஆராய்ச்சி, வேகமாக நடைபெறவில்லை. இந்த காலத்தில் ஃபிராய்ட் செய்த ஆராய்ச்சி அவருக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது. அவர் ஒருவரின் சிந்தனை, அனுபவம் ஆகியவை தன்னுணர்வு, தன்னுணர்வற்ற நிலை ஆகியவற்றில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி விரிவாக விளக்கினார்.  சார்கட்டிடம் பணியாற்றும்போது, ஹிஸ்டீரியா நோயாளிகளுக்கு ஹிப்னாசிஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்படுவை ஃபிராய்ட் கவனித்தார். நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளால் ஹிஸ்டீரியா குறைபாடு ஏற்படுகிறது என சார்கட் கருதினார். பிறகு வியன்னா திரும்பிய சிக்மண்ட் ஃபிராய்ட், ஹிஸ்டீரியாவுக்கான சரியான சிகிச்சை முறையைக் கண்டறிய முயன்றார். அப்போது அங்கு புகழ்பெற்றிருந

மனதில் வெறுமை நிலை உருவாவது எப்படி? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி எப்படி முடிவெடுப்பது? நீங்கள் தேர்வுகளின் அடிப்படையில் வாழ்கிறீர்கள். நீங்கள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் எதற்காக ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்ன தேவை, எந்த விசை உங்களை தேர்ந்தெடுக்க உந்துகிறது? நான் ஒருவரை இப்படி உந்தும் விசையை, ஒருவரின் உள்ளே உள்ள வெறுமை நிலை அல்லது தனிமை   என்று கூறுவேன். இந்த முழுமை இல்லாத நிலை ஒருவரை தேர்ந்தெடுக்க தூண்டுகிறது. இப்போது கேள்வி, வெறுமை நிலையை எப்படி நிரப்புவது என்பதல்ல. அதற்கு பதிலாக வெறுமை நிலையை எது உருவாக்குகிறது என்பதுதான். தேர்வுகளின் செயல்பாட்டால் வெறுமை நிலை உருவாகிறது , செயலின் முடிவில் என்ன கிடைக்கிறது என்பதை நோக்கி செல்வதால் வெறுமை உருவாகிறது என்கிறேன். வெறுமை நிலை உண்டாகும்போது, ஒரு கேள்வி உருவாகிறது, எப்படி இந்த வெறுமை நிலையை நிரப்புவது, தனிமை நிலையை, நிறைவுறாத நிலையை அழிப்பது எப்படி?   என்னைப் பொறுத்தவரை வெறுமை நிலையை நிரப்புவது என்பது ஒரு பதில் கிடைக்கும் கேள்வியாகவே தெரியவில்லை. ஏனெனில் வெறுமையை எதனாலும் நிரப்பவே முடியாது.   ஆனால் பெரும்பாலான மக்களை அதை நிரப்பவே முயன்று வருகிறார்கள். இ

பொருட்களின் தேவை அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகள் - ஜே கிருஷ்ணமூர்த்தி - கேள்வி பதில்கள்

படம்
  அகம்புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் கே. அன்பு அதன் தன்மையில் எத்தகையது? ப. அன்பு என்பது என்ன? அன்புக்கு உள்நோக்கம், அதன் பயன்கள் இல்லாமல் என்ன என்று கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். கவனமாக கேளுங்கள். அதிலிருந்து பதிலைப் பெறலாம். நாம் கேள்வியை ஆராயப் போகிறோம். பதிலைக் கண்டுபிடிக்க போவதில்லை. கணிதம் சார்ந்த கேள்வியை ஒருவருக்கு கொடுத்தால் அவர் உடனே பதிலைக் கண்டுபிடிக்க முயல்வார். கேள்வியை சரியாக புரிந்துகொள்வதே முக்கியம். அதன் போக்கில் நாம் பதிலைப் பெறலாம். பகவத் கீதை, திருக்குரான், பைபிள் அல்லது பேராசிரியர் என எதிலும் உங்களுக்கு விடை கிடைக்காது. கேள்வியைப் புரிந்துகொள்வதே அடிப்படையானது. அதில்தான் பதில் அடங்கியுள்ளது. அது பிரச்னையிலிருந்து வெளியே இல்லை.   இப்போது பிரச்னையைப் பார்ப்போம். அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் அதற்கு எந்த நோக்கமும் இல்லை. அன்பு செலுத்தி அதற்கு பதிலாக அன்பையோ வேறு பயன்களையோ எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா? தான் கொடுத்த அன்பு திரும்ப கிடைக்கவில்லை என ஒருவர் காயம்படுகிறார். இப்போது நான் உங்களை நண்பராக ஏற்றுக்கொள்ள நினைத்து அழைப்பு விடுக்கிறேன். ஆனா

காமத்தைப் பற்றி பேசும் நூல்கள்! - எழுதியவர்கள் அனைவரும் பெண்கள்தான்!

படம்
  காமத்தைப் பேசும் நூல்களில் சில... தி ஆர்ட்ஸ் ஆப் செடக்ஷன் சீமா ஆனந்த் ஆலெப் சீதாஸ் கர்ஸ் ஸ்ரீமோயி பியு குண்டு ப்ளூம்ஸ்பரி லாஸிங் மை வர்ஜினிட்டி அண்ட் அதர் டம்ப் ஐடியாஸ் மாதுரி பானர்ஜி பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  எரோடிக்  ஸ்டோரிஸ் ஃபார் பஞ்சாபி  விடோஸ் பலி கௌர் ஜஸ்வால் வில்லியம் மோரோ செக்ஸ் ஈஸ் மெமோர் ஆப் எ வுமன்ஸ் செக்சுவாலிட்டி பல்லவி பர்ன்வால் ப்ளூம்ஸ்பரி பாலஸ்  கல்ச்சுரல் ஹிஸ்டரி டாக்டர் அல்கா பாண்டே ஹார்பர் கோலின்ஸ் தி எல் வேர்ட் லவ், லஸ்ட் அண்ட் எவ்ரிதிங்க் இன் பெட்வீன் ஆஸ்தா அட்ரே பனான் ஹார்பர்கோலின்ஸ் இந்த நூல்களை எழுதியவர்கள் அனைவருமே பெண்கள் என்பதை நம்புங்கள். அதுதான் உண்மை. 

பசிக்கும் உணவுக்கும் என்ன தொடர்பு?

படம்
pixabay பசியும் ஆசையும்! நமக்கு பசி ஏற்படுவது அவசியமான தேவை. தூக்கம், பசி என்ற இரண்டுமே உடலின் அடிப்படைத் தேவை. உடலுறவு போன்றவை பிற ஆசைகள். உடலின் ஆற்றல் குறையும்போது இரண்டு விஷயங்கள் நமக்கு ஏற்படும். ஒன்று பசி, மற்றொன்று தூக்கம். பசி எப்படி தோன்றுகிறது? வயிற்றிலுள்ள குடல்பகுதி, கொழுப்பு சேகரிக்கும் பகுதி, மூளை, கண்கள், வாய் ஆகியவற்றால் பசி உருவாகிறது. கட்டுப்படுத்தப்படுகிறது. மதிய நேரத்தில் நிலாச்சோறு உணவகத்தைப் பார்த்தவுடனே எப்படி பசிக்கிறது? நீங்கள் அந்த உணவகத்தைப் பார்க்கிறீர்கள். அங்கு வடை, போண்டா தட்டில் இருக்கிறது. பல்வேறு நிறங்களில் உள்ள உணவுகளை அங்குள்ள மக்கள் வேகமாக அள்ளி சாப்பிடுகிறார்கள். இதைப்பார்க்கும் கண்கள் மூளைக்கு சிக்னல் கொடுக்க, மூளை வயிற்றை சோதனையிட்டால் அங்கு உணவு இருக்கிறதா என்பது தெரிந்துவிடும். உடனே வயிற்றில் சத்தம் கேட்கத்தொடங்க, வாயில் உமிழ்நீர் சுரக்கத் தொடங்குகிறது. நீர்  உடலில் எளிதாக உட்கிரகிக்கப்படுகிறது. தாகத்தைப் போக்குகிறது. உடலைக் குளிர்விக்கிறது. ஃபைபர்  பல்வேறு தானியங்களில் நிறைந்துள்ளது. செரிக்க கடினமானது. எனவே வயிற்றை நிறைத

திகில் படங்களின் மீது ஏன் ஆசை வருகிறது? உளவியல் பார்வை இதோ!

படம்
டாக்டர் எக்ஸ் சிலர் திகில் படம் பார்க்க ஏன் ஆசைப்படுகிறார்கள்? சாகச அனுபவ விரும்பிகளாக இருப்பார்கள். வேறென்ன, இப்போது பாருங்கள். என் அருகில் அமர்ந்துள்ள ஓவியர், எப்போதும் போகும் டீக்கடைக்கு போகாமல் தூரமாக போய் டீ குடித்துவிட்டு வேறு வழியாக ஆபீசுக்கு வருகிறார். என்ன ஆச்சுங்க சார் என்றால், போரடிக்குது ப்ரோ என்றார். ஆம். அதுதான். காரமான உணவு சாப்பிடுவது, ஸ்கை டைவிங் செய்வது, மலையில் கயிறு கட்டி மிஷன் இம்பாசிபிள் படம் காட்டுவது எல்லாமே இதையொட்டி ஏற்படுவதுதான். ஆபீஸ் வாழ்க்கையில் நீங்கள் என்ன சாகசத்தை அனுபவிக்க முடியும். அப்படி சாதிக்கும் வெறியில் தட்டினாலும் தலைமுறைக்கே உழைக்கும் டிவிஎஸ் பாரத் கீபோர்டைக் கொடுத்துவிடுவார்கள். ஒன்றும் செய்யமுடியாது. பொதுவாக ஆண்கள் பெண்களைத் தவிர வேறு யாருக்கும் பயப்படுவது கிடையாது. எனவே திகில் படங்களான ஈவில் டெட், கான்ஜூரிங் வகையறாக்களை ஊதித்தள்ளுவார்கள். ஆனால் டேட்டிங்கில் பெண்கள் பயத்தில் கட்டிப்பிடிக்க ஆள் வேண்டுமே? அதற்கு ஆண்கள் உதவுகிறார்கள். ஆண்கள் தம்மை பாதுகாவலராக காட்டிக்கொள்ளவும் இந்த சந்தர்ப்பங்கள் உதவுகின்றன என்கிறார் உளவியலாளரா