பொருட்களின் தேவை அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகள் - ஜே கிருஷ்ணமூர்த்தி - கேள்வி பதில்கள்
அகம்புறம்
ஜே கிருஷ்ணமூர்த்தி
கேள்வி
பதில்கள்
கே. அன்பு
அதன் தன்மையில் எத்தகையது?
ப. அன்பு
என்பது என்ன? அன்புக்கு உள்நோக்கம், அதன் பயன்கள் இல்லாமல் என்ன என்று கேட்கிறீர்கள்
என நினைக்கிறேன். கவனமாக கேளுங்கள். அதிலிருந்து பதிலைப் பெறலாம். நாம் கேள்வியை ஆராயப்
போகிறோம். பதிலைக் கண்டுபிடிக்க போவதில்லை. கணிதம் சார்ந்த கேள்வியை ஒருவருக்கு கொடுத்தால்
அவர் உடனே பதிலைக் கண்டுபிடிக்க முயல்வார். கேள்வியை சரியாக புரிந்துகொள்வதே முக்கியம்.
அதன் போக்கில் நாம் பதிலைப் பெறலாம். பகவத் கீதை, திருக்குரான், பைபிள் அல்லது பேராசிரியர்
என எதிலும் உங்களுக்கு விடை கிடைக்காது. கேள்வியைப் புரிந்துகொள்வதே அடிப்படையானது.
அதில்தான் பதில் அடங்கியுள்ளது. அது பிரச்னையிலிருந்து வெளியே இல்லை.
இப்போது
பிரச்னையைப் பார்ப்போம். அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் அதற்கு எந்த நோக்கமும் இல்லை.
அன்பு செலுத்தி அதற்கு பதிலாக அன்பையோ வேறு பயன்களையோ எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா?
தான் கொடுத்த அன்பு திரும்ப கிடைக்கவில்லை என ஒருவர் காயம்படுகிறார். இப்போது நான்
உங்களை நண்பராக ஏற்றுக்கொள்ள நினைத்து அழைப்பு விடுக்கிறேன். ஆனால் அதை நீங்கள் மறுக்கிறீர்கள்.
இது என்ன காயப்படுத்துகிறதா? காயம்படுத்தல் என்பதிலிருந்து வெளியாகும் உணர்வு என்ன
கருணையா அல்லது கழிவிரக்கமா? எங்கு நிராகரிப்பால்
காயம்படுதல் இருக்கிறதோ அங்கு பயம் இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் எனக்கு உதவி
செய்தீர்கள் என்று பதிலுக்கு நானும் உதவவேண்டும் என நினைத்தால் அதன் பெயர் சேவை என்றாகிறது.
அங்கு அன்பு இல்லை.
நீங்கள்
இதைப் புரிந்துகொண்டீர்களா, விடை இதிலேயே இருக்கிறது.
கே. மக்களுக்கு
பொருட்கள் தேவைப்படுவது எதற்காக?
ப. நீங்கள்
பசியோடு இருக்கிறீர்கள். அப்போது உணவு தேவைப்படுகிறது அல்லவா? உடைகள், தங்குவதற்கு
வீடு ஆகியவையும் தேவை. இவையெல்லாம் ஒருவருக்கு இயல்பான தேவைகள். ஆரோக்கியமான மக்கள்
இதுபோல அடிப்படையான தேவைகளை எளிதாக புரிந்துகொள்வார்கள். நோய்வாய்ப்பட்ட சமநிலையில்
இல்லாத மனிதர் எனக்கு உணவு தேவையில்லை என்று கூற முடியும். இது ஒரு மோசமான ஏமாற்றும்
மனநிலை. இப்படி பேசுபவருக்கு நிறைய வீடுகளை வாங்கும் தேவை இருக்கலாம் அல்லது வாழ்வதற்கு
வீடே இல்லாத நிலை கூட இருக்கலாம்.
உங்களுக்கு
பசி ஏற்படுகிறது என்றால் உடல் ஆற்றலை செலவு செய்கிறது. அதை ஈடு செய்ய உணவு சாப்பிட
வேண்டியதிருக்கிறது. இது இயல்பானது. எனக்கு ருசியான உணவு வேண்டும். அப்படி சாப்பிட்டால்தான்
எனது நாக்கிற்கு திருப்தி, மகிழ்ச்சி என்று கூறினால் பிரச்னை தொடங்குகிறது. உலகிலுள்ள
அனைவரும் பெரும் பணக்காரர்கள் அல்ல. ஆனால் அனைவருக்குமே உணவு, உடை, வீடு ஆகியவை உண்டு.
இந்த புறரீதியான
தேவைகள் என்பவை குறிப்பிட்ட வரம்புகளைக் கொண்டவை. ஆனால் இவை கட்டுப்படுத்தப்பட்டு சிலருக்கு
மட்டும் கிடைப்பது பிரச்னைக்கான தொடக்கம். எனக்கு அனைத்தும் தேவை. எனக்கு மட்டும்தான்
அனைத்தும் கிடைக்கவேண்டும் என ஒருவர் நினைத்தால் செயல்பட்டால் பிறரின் அடிப்படைத் தேவைகளை
அவர் பறித்துக்கொள்கிறார் என்று அர்த்தம்.
குறைந்த
உடை, எளிமையான வீடு, உணவு என ஒருவர் தேவைகளைக்
கொண்டிருக்கலாம். ஆனால் அதைத் தாண்டி ஒருவருக்கு நிறைய விஷயங்கள் தேவைப்படலாம். புகழ்பெற்ற மனிதராக இருக்கவேண்டும். அதிகாரம், பதவி, பெருமை
தேவையாக இருக்கிறது. நான் கடவுளுக்கு அருகில் இருக்க நினைக்கிறேன். வெளிப்புறத்தில்
நிறைவுற்று இருப்பதை விட உள்புகமாக மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம். இப்படி பல்வேறு
விஷயங்களை ஒருவர் சார்ந்திருப்பது உள்முகமாக நிறைவுற்று இருப்பதற்கு பெரும் தடையாக
மாறுகிறது.
லைஃப் அகேட் நூலிலிருந்து…
கருத்துகள்
கருத்துரையிடுக