குழந்தைக்கு பெற்றோர்தான் அனைத்தையும் கற்றுத்தரவேண்டும் - மாயாஸ் அம்மா - ஸ்வாதி ஜெகதீஷ்

 










ஸ்வாதி ஜெகதீஷ், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். அங்கு அவரின் கருவில் உள்ள குழந்தையை சோதித்தவர்கள், பிறப்புறுப்பையும் (அல்குல்) அனுமதியின்றி தொட்டு பார்த்தனர். இது ஸ்வாதியின் மனதை பாதித்தது. பிறகு அவர் தனது குழந்தையை கோவாவில் நீரில் குழந்தையை பெறும் முறையில் பெற்றெடுத்திருக்கிறார். அதற்கும் இப்போது அவரைப் பற்றி பேசுவதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்கிறீர்களா?

இன்றைக்கும் திரைப்படம் பார்ப்பதில் குடும்ப படம், இளவயதினர் பார்ப்பது என சில தடைகள் உண்டு. சமூகத்தில் பொது இடத்தில் செக்ஸ், வஜினா என்று பேசிப்பாருங்கள். உங்களை ஒதுக்கிவிடுவார்கள். அதுபோன்ற பாலியல் சொற்களைக்  கொண்ட கல்வியை ஸ்வாதி பேசி வருகிறார். இதற்கெனவே கோயம்புத்தூர் பேரன்டிங் நெட்வொர்க் என்ற தன்னார்வ நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு மூலம் பெண்கள், பெற்றோர் என பலருக்கும் குழந்தை நலம், குழந்தை வளர்ப்பு பற்றி கல்வியைக் கற்றுத் தந்து வருகிறார்.

ஸ்வாதியை எப்படி அடையாளம் காண்பது, மாயாஸ் அம்மா என்றால் கோவையில் தன்னார்வ தொண்டு வட்டாரத்தில் இவரை அடையாளம் காணலாம்.  மகள் மாயா பிறந்தபிறகு 2015ஆம் ஆண்டு ஸ்வாதி சிபிஎன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். குழந்தை வளர்ப்பு, பாலியல் கல்வி, தாய்ப்பால் ஊட்டுதல்,  கர்ப்பகால அறிவுரை என செயல்பட்டார். இந்த அமைப்பில் ஸ்வாதியோடு மினு ஞானமூர்த்தி, கோதா ஹரி ப்ரியா, குமுதா சந்திரிகா ஆகியோர் இணைந்து பணிபுரிகிறார்கள்.

நேரடியாக களச்செயல்பாடுகளோடு கூடுதலாக சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூட்யூபிலும் மாயாஸ் அம்மா என்ற பெயரில் ஸ்வாதி பதிவுகளை இடுகிறார். அறிவுரைகள் கொடுத்து வருகிறார்.

  ‘’பெற்றோர் தங்கள் உடல்களைப் பற்றி அறிய நினைக்கும் குழந்தைகளுக்கு தேவையான விஷயங்களைக் கற்றுத் தருவதில்லை. இன்று இதுபோன்ற பாலியல் கல்வி, குழந்தைகள் வளர்ப்பு பற்றிய விஷயங்களை கூறுவது அவசியம்.  என்னுடைய மகள் மாயாவிடமிருந்து நான் தினந்தோறும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அவள் இணையத்தில் தேடினால், பெற்றோர் சொல்லாத நிறைய விஷயங்களைக் கற்கலாம்.  எனவே, நானே அவளுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லத் தொடங்கினேன். உடல், மனம் சார்ந்த விஷங்களில் பெற்றோர் பதில் சொல்வது குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது’’ என்கிறார் ஸ்வாதி.

எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை விட எதற்கு பேச வேண்டும் என்பதை ஸ்வாதி தனது செயல்கள் மூலம் உணர்த்தியுள்ளார். கோவை மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தமிழர்கள் ஸ்வாதியின் யூட்யூப் மூலம் பாலியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதைக் கற்றுக்கொள்ளலாம்.

அரவிந்த்ராஜ் – நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

https://mayasamma.com/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்