அறிவியல் முன்னேற்றத்தால் எளிமையான வாழ்க்கை - ஜித்து கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்
அகம் புறம்
ஜே கிருஷ்ணமூர்த்தியின்
கேள்வி பதில்கள்
கே. அறிவியல்
முன்னேற்றங்கள் நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளதா?
ப.
அறிவியல்
கண்டுபிடிப்புகள் உங்கள் வாழ்க்கையை எளிதாக மாற்றவில்லையா என்ன? மின்சாரம் இருக்கிறது.
உங்கள் அறையில் ஒரு ஸ்விட்சை தட்டினால் விளக்கு எரிகிறது. ஆகாயவிமானத்தில் ஏறினால்
லண்டனிலிருந்து டெல்லிக்கு எளிதாக சென்றுவிடலாம். தொலைபேசி அறையில் பொருத்தப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் உங்களுக்கு நண்பர்களோடு பேசத் தோன்றினால் அவர்களோடு பேசலாம். அறிவியல் கண்டுபிடிப்புகள்
வாழ்க்கையை எளிமையாக்கி உள்ளன என்பது உண்மைதான். நோய்களை எளிதாக கண்டறிந்து தடுக்க
முடிகிறது. அதேசமயம் அதே அறிவியல் மூலம்தான் ஹைட்ரஜன் வெடிகுண்டுகளை கண்டறிந்தனர்.
இதை வெடிக்க வைப்பதன் மூலம் பல லட்சம் மக்களை கொல்ல முடியும். நமது அறிவை விழிப்புணர்வோடும்
அன்புடனும் சேர்த்து பயன்படுத்தினால் நம் வாழ்க்கையை நாமே அழித்துக்கொள்வதிலிருந்து
காக்கலாம்.
கே. பெரிய
மீன் சிறிய மீனை தின்று வாழ்வது இயல்பானதா?
விலங்குகள்
உலகில் நீங்கள் சொல்வது போல பெரிய மீன், சிறிய மீனை உணவுக்காக நம்பியிருக்கலாம். இது
இயற்கையாக அமைந்திருக்கலாம். இதை மாற்ற முடியாமலும்
கூட இருக்கலாம். நான் மனிதர்களைப் பொறுத்தவரை ஒருவர் இன்னொரு மனிதரை நம்பி வாழ வேண்டியதில்லை.
நாம் நமது அறிவை எப்படி பயன்படுத்துவது என கற்றால் அகம், புறம் என இரு விஷயங்களிலும்
பிறரைச் சார்ந்து வாழ வேண்டியது இல்லை. நான் நாம் பிறரைச் சார்ந்துதான் வாழ்ந்து வருகிறோம்.
பலவீனமானவர்களை இதற்காக நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். அவர்கள் மீது நிறைய உரிமைகளை
நாமாக எடுத்துக்கொள்கிறோம். எங்கு விழிப்புணர்வு உள்ளதோ அங்குதான் உண்மையான சுதந்திரம்
உள்ளது. உறவுகளை புரிந்துகொள்ளலில்தான் விழிப்புணர்வு கொண்ட அறிவு உருவாகிறது. எனக்கும்
உங்களுக்கும் உள்ள உறவு போன்றதுதான் நாம் அனைவரும்
கொண்டுள்ள உறவும் அமையவேண்டும்.
வலிமையானவர்கள்
எதற்காக பலவீனமானவர்களை நசுக்க வேண்டும்?
நீங்கள்
பலவீனமானவர்களை நசுக்குகிறீர்களா? சரி அதை நாம் கண்டுபிடிப்போம். வாதம் அல்லது உடல்
பலம் அடிப்படையில் பார்ப்போம். நீங்கள் உங்களது அண்ணனை அடித்து கீழே தள்ளிவிட முடியுமா?
உங்களை விட இளையவர் என்றால் இந்த முயற்சி சாத்தியமாகலாம். ஏன் இப்படி செய்கிறீர்கள்?
உங்களை நீங்கள் நிரூபிக்க முயல்கிறீர்கள். உங்கள் பலத்தை பிறருக்கு காட்ட நினைக்கிறீர்கள்.
பிறரை ஆதிக்கம் செலுத்தும் மனிதராக நினைக்கிறீர்கள்.
குழந்தையை
கீழே தள்ளிவிடுவதும், எடைகளை தூக்கி எறிவதும் தனது பலத்தை பிறருக்கு நிரூபிக்கவே நடக்கிறது. வயதானவர்கள் விஷயத்திலும் இப்படித்தான் நடைபெறுகிறது. அவர்கள் உங்களை விட வயதில் பெரியவர்கள். நிறைய அனுபவங்களைப்
பெற்றிருக்கிறார்கள். நிறைய நூல்களை படித்திருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரம், பணம்,
செல்வாக்கு உள்ளது. எனவே உங்களை அவர்களை கீழே தள்ளுகிறார்கள். நீங்களும் அந்த சூழலில்
அதை ஏற்றுக்கொள்கிறீர்கள். பிறகு வாய்ப்பு கிடைக்கும்போது நீங்கள் பிறரை கீழே தள்ளுகிறீர்கள்.
உலகில் ஒவ்வொருவரும் பிறர் மீது அதிகாரத்தை காட்ட
தன்னை நிரூபிக்க முயல்கிறார்கள். இந்த உணர்வு நம் அனைவரின் மனதிலும் உள்ளது.
நாம் நம்மை ஒன்றுமில்லை என்று நிரூபிக்க ஏதேனும் ஒன்றைச் செய்கிறோம். பிறர் மீது நாம்
அதிகாரத்தை பதிய வைக்கும் முயற்சி, நமக்கு சுய திருப்தியை கொடுக்கிறது. நாம் வேறு ஒரு
விதமான நபர் என்ற தன்மை மனதில் படிகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக