அறிகுறிகளை வைத்து நோய்களை கணிக்கும் முறை - அவசர சிகிச்சை மருத்துவம்

 








நோயாளியின் குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை பற்றிய குறிப்புகள் முக்கியமானவை. இவற்றை நாம் அறிந்தால் அவருக்கு எளிதாக சிகிச்சை செய்ய முடியும்.  குடும்ப விவரங்களை அறிவது எதற்கென்றால், நோயாளியின் குடும்பத்தில் பாரம்பரியமாக சில நோய்கள் உருவாகி வந்திருக்கலாம். அதை தெரிந்தால் அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது எளிது.

இதய நோய்கள், த்ரோம்போயம்போலிக் நோய், குடல்வால், பித்தப்பை நோய், புற்றுநோய் ஆகியவை குடும்ப ரீதியாக ஏற்படும் நோய்கள். எனவே, இவற்றை ஆராய நோயாளி கூறும் விவரங்கள் அவசியம்.  மதுப்பழக்கம், புகையிலை பயன்படுத்துகிறாரா, போதைப்பொருட்கள் பழக்கம், திருமணம் ஆனவரா, நரம்பியல் ரீதியாக பாதிப்பு ஏதேனும் உள்ளதா என ஆராய்வதும் முக்கியமானது.

இதையொட்டி கேட்கப்படும் கேள்விகளைப் பார்ப்போம்.

வலி எப்போது தொடங்கியது?

வலி தொடங்கும்போது என்ன வேலை செய்துகொண்டிருந்தீர்கள்.?

வலியின் உணர்வு எப்படி இருக்கிறது?

இதற்கு முன்னர் இப்படி வலி ஏற்பட்டிருக்கிறதா?

வலிக்கான அளவுகோலாக 0 லிருந்து பத்துக்குள் ஒரு எண்ணைச் சொல்ல முடியுமா?

வலிக்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வலி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா?

நோய் சார்ந்த அறிகுறிகள் முக்கியம். அதை கருத்திக்கொள்ளவேண்டும். ஒருவருக்கு செய்யப்படும் நோய் பற்றிய ஆய்வு சரியாக இருந்தால் கிடைக்கும் முடிவு அறிகுறிகளை உறுதிப்படுத்த வேண்டும். இதை பார்சிமோனி என்கிறார்கள்.

இப்போது நோய்களையும், அது சார்ந்த அறிகுறிகளையும் பார்ப்போம்.

இதயநோய்கள்

இருமல், சோர்வு, மார்பு வலி, மூச்சுத் திணறல், உணர்விழப்பு, படபடப்பு, திடீரென மூச்சு நின்றுபோவது. 

குடல் சார்ந்த நோய்கள்

வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, மலக்கட்டு, வயிற்றுப்போக்கு, ரத்தக்கசிவு, உணவைக் குறைவாக சாப்பிடும் நோய் - அனோரெக்சியா

கருப்பை சார்ந்த நோய்கள்

கர்ப்பம், மாதவிலக்கு, கர்ப்பத்தடை, பாலுறவு, பாலுறவு சார்ந்த தொற்று, பிறப்புறுப்பில் ரத்தக்கசிவு, இடும்பெலும்பு பகுதியில் ஏற்படும் தொற்றுநோயப்பு, பாலுறவின்போது பிறப்புறுப்பில் ஏற்படும் வலி.

நரம்பியல் சார்ந்த நோய்கள்

பலவீனமாக இருப்பது, பேசுவதில் சிரமம், மயக்கம், கவனம் செலுத்த இயலாமை, உணர்வுநிலை மாற்றம், தலைவலி, பார்வையில் பிரச்னைகள், உடல் சமநிலை தவறுவது

நோயாளியின் உடல்நிலையைக் கவனிக்கும்போது நேரம் முக்கியம். மேற்சொன்ன நிறைய விஷயங்களை ஒருவர் வேகமாக கணித்து சிகிச்சையைத் தொடங்கவேண்டும். நேரக்கணக்கு 15 நிமிடங்கள்தான். உடல், மனம் என அனைத்தும் புல்லட் ரயில் போல இயங்குவது அவசியம். தடகளத்தில் நூறு மீட்டர் ஓடும் வீரர் போல இயங்கினால் மட்டுமே ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் வேலை செய்ய முடியும்.

இதயத்துடிப்பு

நோயாளியைப் பொறுத்தவரை இதயத்துடிப்பு, அதன் ஏற்ற இறக்கங்கள் முக்கியம். அவசர சிகிச்சையைப் பொறுத்தவரை வைட்டல் சைன்ஸ் எனும் இந்த விவரங்கள் முக்கியமானவை. இதைப்பார்த்துத்தான் நோயாளிக்கு  இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், இதயத்துடிப்பின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிட்டு மருத்துவம் செய்வார்கள்.

image - pixabay

கருத்துகள்