இடுகைகள்

நே்ர்காணல்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கு நீதிமறுக்கப்படுவது கோபத்தை தருகிறது!

படம்
இந்தியாவில் ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் பெண்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தல்களை சந்திக்கிறார்கள் என்கிறது ஆய்வுத்தகவல். கடந்த ஆறு ஆண்டுகளாக பெண்கள் சந்திக்கும் வல்லுறவு, தாக்குதல், படுகொலைகள் என அனைத்தையும் ஆவணப்படுத்தி வருகிறார் பத்திரிகையாளர் பிரியங்கா துபே. தற்போது மீடூ இயக்கம் வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது. அதைப்பற்றிய தங்கள் கருத்து? மீடூ இந்தியாவில் பரவியபோது நான் எனது நூலை எழுதி முடித்திருந்தேன். பத்திரிகையாளராக அதன் நகர்வை தற்போது கவனித்து வருகிறேன். இது மேல்தட்டு வர்க்கத்தில் நிகழும் பாலியல் அத்துமீறல்களை கவனப்படுத்துகிறது. இது அனைத்து பெண்களுக்கான நீதியைப் பெற்றுத்தர கருவியாக உதவுமா என்று தெரியவில்லை. இணையத்தில் வைரலானாலும் பெண்களுக்கான நீதியைப் பெற்றுத்தர நாளாகலாம்.  பெண்கள் பற்றிய ஆய்வுக்காக வேறுபாடுகள் நிறைந்த நகரங்களுக்கு கிராமங்களுக்கு சென்றிருப்பீர்கள். பத்திரிகையாளராக, பெண்ணாக உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். விரக்தியும் நம்பிக்கையும் ஒருசேர மனதில் உருவானது உண்டு. தொடக்கத்தில் களப்பணியின்போது நீதிமறுக்கப்பட்ட நிக