இடுகைகள்

இணையத் தொழில்நுட்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் உயரும் தாய்மொழி பிஸினஸ்! - டெக் கம்பெனிகளின் புது ரூட்

படம்
விரல்நுனியில் தாய்மொழி - டெக் நிறுவனங்களின் புதிய பிஸினஸ் ரூட் -   ச . அன்பரசு கைப்பக்குவத்தால் நாக்கின் வழியாக இதயத்தை தொடுவது சமையல் என்றால் உணர்வு வழியாக இதயத்திற்கு நெருக்கமாவது நிச்சயம் தாய்மொழி மட்டும்தான் . அம்மா என்பதற்கும் மம்மி என்பதைக் கேட்கும்போது நம் மனதில் என்ன தோன்றுகிறதோ அதே வித்தியாசம்தான் தாய்மொழிக்கும் , ஆங்கிலத்திற்கும் இடையில் உள்ளது . இந்தியாவில் பீறிட்டுபாயும் தாய்மொழி பாசத்தை டெக் நிறுவனங்கள் கப்பென பிடித்துள்ளன . உள்ளூரில் சரக்கை விற்க , அவர்களின் மொழியில் பேசினால்தானே வேலை நடக்கும் என்பதுதான் கான்செப்ட் . கூகுள் , மைக்ரோசாஃப்ட் , ஃபேஸ்புக் என அனைத்தும் சரியான நேரத்தில் கச்சிதமாக இந்தியாவில் தாய்மொழி ரூட்டைப் பிடித்துள்ளன . கூகுள் வரும் ஆகஸ்டில் தன் சர்ச்எஞ்சினில் எட்டு மொழிகளை புதிதாக சேர்க்கவுள்ளது . முன்னர் ஒன்பது இந்தியமொழிகளை சேர்த்துள்ள நிலையில் புதிய மொழிகளை இணைத்து குரல்தேடுதல் வசதியையும் கான்க்ரீட்டாக்கியுள்ளது . மைக்ரோசாஃப்ட்டின் பிங் தேடுபொறி குழுவும் தங்கள் பங்கிற்கு மூன்று இந்திய மொழிகளை புதிதாக தங்கள்